View Single Post
Old 07-27-2012, 03:28 PM   #28
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
திரு இமான் அவர்களுக்குள் இப்படி ஒரு இசையா என்று பிரமிக்கும் வண்ணம் பாடல்கள் அசத்துகின்றன. நீண்ட நாட்களுக்குப் பின் இசையரசர் இளையராஜா அவர்களுக்குப் பிறகு பாடல்களில் எளிமையும் உள்ளது அதே சமயம் அதன் வீச்சும் பிரம்மாண்டமாய் உள்ளது. கேட்கும் மாத்திரத்திலேயே நெஞ்சில் சப்பணமிட்டு அமர்ந்து கொள்ளும் வகையில் மெட்டுக்கள் உள்ளன. எல்லா வயதினரையும் ஈர்க்கும் சக்தி இப்பாடல்களுக்கு உள்ளது. முழுப் பாராட்டும் பிரபு சாலமன் அவர்களுக்குத் தான் சேர வேண்டும். பாடல்களில் குறிப்பாக, வார்த்தைகளை இசை கெடுக்கா வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது பாராட்டத் தக்கது. அனைத்துப் பாடல்களும் இனிமை என்றாலும் ஒண்ணும் புரியலே, சொல்லிட்டாளே, அதிலும் குறிப்பாக அய்யய்யோ ஆனந்தமே பாடல் .... கேட்டுக் கொண்டே இருக்கலாம்... ஒளிப்பதிவு உண்மையிலேயே பிரமிக்க.......................வைக்கிறது. அருவிகளில் ஹோவென்ற இரைச்சலுடன் நீர் கொட்டும் காட்சியை மேலிருந்து படம் பிடித்திருப்பது த்ரில்லிங்...

ஆடியோவும் டிரைலரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி யிருப்பது நிஜம்.

பாடல்களைக் கேட்டு மகிழ

அய்யய்யோ... ஆனந்தமே .... - விஜய் டிவி சூப்பர் சிங்கர் போட்டியில் பிரபலமான ஹரிசரண் பாடியுள்ளார் என எண்ணுகிறேன்.

சொல்லிட்டாளே - பாடியவர்கள் ரஞ்சித், ஸ்ரேயா கோஷல்

ஒண்ணும் புரியலே - பாடியவர் இமான். இந்தப் பாடல் சொல்லத் துடிக்குது மனசு படத்தில் இடம் பெற்ற பூவே இளம் பூவே பாடலை நினைவு படுத்துகிறது...
MannoFr is offline


 

All times are GMT +1. The time now is 06:18 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity