View Single Post
Old 02-17-2010, 02:20 PM   #20
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default
கார்த்திக்கின் பல முயற்சிகள் பிரமிக்க வைக்கும்.

கிழக்கு வாசல்: அம்மா மனோரமா இறந்ததை உணர்ந்து அழுவது. தயாரிப்பாளர் சத்யஜோதி சேனலுக்கு தந்த பேட்டியொன்றில், படப்பிடிப்பு தளத்தில் எல்லோரும் நெகிழ்ந்து, கட் சொல்லாமல் கேமரா ஓடிக்கொண்டே இருந்ததாம் எனச் சொன்ன போது, கமலின் புன்னகை மன்னன் - மரத்தில் சிக்குண்டு கமல் அழும் காட்சியை கட் செய்யாமல் எடுத்துக்கொண்டே இருந்த பாலச்சந்தரின் அனுபவம்தான் நியாபகத்திற்கு வந்தது.

கோ.சீதை : ஒரு இடம் என்றில்லாமல், படம் முழுவதும் இயல்பான நடிப்பில் அசத்தியிருப்பார்.

அக்னி நட்சத்திரம் : தன் தந்தையாருக்கு தனது அம்மா ஒரு வப்பாட்டி என்ற அவமானத்தை கோபமாக வெளிப்படுத்தும் பல காட்சிகள்.

கோபுர வாசலிலே : நாகேஷுடன் இவர் வரும் பள்ளிக் காட்சிகள் எல்லாமே சரவெடி.
Ifroham4 is offline


 

All times are GMT +1. The time now is 12:21 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity