View Single Post
Old 05-15-2006, 08:00 AM   #3
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
கார்த்திக் நல்ல கலைஞர்தான். சந்தேகமேயில்லை. ஒரு காலத்தில் கல்லூரி மாணவிகளின் ஆதர்ச நாயகனாக வலம் வந்தவர்தான். ஆனால் தனக்குக்கிடைத்த நல்ல வாய்ப்புக்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்தாரானால் இன்று வரை தொய்வு விழாத நாயகனாக வலம் வந்திருப்பார்.

என்ன செய்வது. கூடாத பழக்கங்களுக்கு வாய்ப்பட்டு, தானே அவற்றைக்கெடுத்துக்கொண்டார். படப்பிடிப்பிடிப்பில் அனைவரையும் காக்க வைத்துவிட்டு லேட்டாக ஷூட்டிங்குக்கு வருவது, அடிக்கடி ஷூட்டிங்களை கேன்ஸல் பண்ணுவது. அதனால் இவருடைய கால்ஷீட் மட்டுமல்ல, இவரோடு நடிப்பவர்களிடமும் தயாரிப்பாளர்கள் வாங்கிய கால்ஷீட்டுகள் வீண். என்னதான் அற்புதமான நடிகராக இருந்தாலும், இதுபோன்ற விரயங்களை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் எத்தனை நாட்கள்தான் பொறுத்துக்கொள்வார்கள்..?. கடும்போட்டி நிறைந்த திரையுலகில், எழுந்துபோய் எச்சில் துப்பிவிட்டு வருவதற்குள், ஒருவர் இடத்தை மற்றவர்கள் பிடித்துக்கொள்வார்கள். அப்படியிருக்க, இவரால் ஏற்படும் தாமதங்களையும், விரயங்களையும் எவ்வளவு நாள் சகித்துக்கொள்வார்கள்?. அதனால்தான், ரசிகர்கள் மத்தியில் அபார செல்வாக்கு இருந்தும் காணாமல் போனார்.

இவரது போட்டியாளர்கள், திறமையில் சில படிகள் கீழே இருந்தபோதிலும், மற்ற விஷயங்களில் (குறிப்பாக படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு போன்றவை) பல படிகள் மேலே போய் தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர்.

அரசியலிலும்கூட அப்படித்தான். ஆரம்பத்தில் தென் மாவட்டங்களில் இவருக்கு கிடைத்த அபார வரவேற்பையும், பொதுக்கூட்டங்களில் கூடிய மக்கள் கூட்டத்தையும் முறைப்படி பயன்படுத்திக் கொண்டிருந்தால் அரசியலிலும் ஒரு நல்ல இடத்துக்கு வந்திருப்பார். அங்கும் இப்படித்தான். பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துவிட்டு மிகவும் தாமதமாகப் போவது, அதுகூடப்பரவாயில்லை, பல சமயம் மக்களை காக்க வைத்துவிட்டு கூட்டத்துக்குப்போவதே கிடையாது. (பலமுறை மக்கள் இவரைத் திட்டிக்கொண்டே கலைந்து போவார்களாம். தினசரிகளில் படித்திருக்கிறேன்).

மொத்தத்தில் இவரை யாரும் வீழ்த்தவில்லை. தன்னைத்தானே வீழ்த்திக்கொண்டார்.
LottiFurmann is offline


 

All times are GMT +1. The time now is 12:28 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity