Thread
:
Kalaiyulaga Kalangarai Vilakkam Kamal Haasar Saranaalayam-7
View Single Post
11-25-2010, 04:59 PM
#
28
TorryJens
Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
விகடன் பொக்கிஷம்
டின்னர் - கோட்ஸேக்கு நன்றி சொல்லுங்கள்!
எந்தக் காரியமாயினும் முழு ஈடுபாட்டோடு, உணர்வுபூர்வமாகச் செய்யும் கமல்ஹாசன், 'மகாநதி' யின் ஒவ்வொரு ஃபிரேமிலும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தபோதிலும், இடையே நம்மைச் சந்தித்தார்
"டின்னருக்கு நீங்கள் யாரை அழைப்பீர்கள்?"
"மோகன்தாஸ் கரம்சந்த் காந்தின்னு ஒரு வக்கீல் இருந்தாரே... அவரைத்தான்!
அவர்மீது எனக்கு ப்ரியம்- மரியாதை அதிகம். அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவர் அருகே அமர்ந்து, பேசிக்கொண்டே சாப்பிடும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. அதனால், எனது டின்னருக்கு அவரை விருந்தினராக அழைக்க விரும்புகிறேன். கற்பனை என்பதல்ல... இது என் ஆத்மார்த்த ஆசை."
"அவரை செலக்ட் பண்ணக் காரணம் என்ன?"
"அவர் ஒரு வக்கீல். வழக்கறிஞர்களுக்கும் எனக்கும் ஜன்மார்ந்த பந்தம் உண்டு. என் அப்பா, சகோதரர் உள்பட என்னைச் சுற்றிலும் வழக்கறிஞர்களே அதிகம். எனக்குத் தெரிந்த வக்கீல்களெல்லாம் கடைசிவரை 'பிராக்டீஸ்' பண்ணிச் சம்பாதித்தனர். அப்படி இருக்கும்போது, இந்த வக்கீல் மட்டும் (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி) கறுப்பு அங்கியை உதறி எறிந்துவிட்டு, தேச சேவையில் மக்கள் நல்வாழ்வுக்காக, சுதந்திரத்துக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டார். வருமானம் தருபவற்றை உதறிவிட்டு, எதற்காக இப்படிச் செய்தார் என்று அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்."
"டின்னரை எங்கு வைத்துக் கொள்வீர்கள்?"
"விருந்தோம்பலில் தமிழருக்கென்று சிறப்பு உண்டே! நமது இல்லத்துக்கு வரவழைத்து விருந்தளிப்பதுதானே முறை! எனவே, எனது சொந்த ஊரான பரமக்குடியில் உள்ள எனது வீட்டுக்கு (தேசிய பெருமை வாய்ந்ததாக்கும்) அவரை அழைக்கவே விரும்புகி றேன்."
"டேபிள், சேர் போடுவீர்களா?"
"அதெல்லாம் எதற்கு? அந்த மனிதருக்குக் கால்களை மடக்கி உட்காருவதுதானே பிடிக்கும்! அவர் இஷ்டப்படியே தரையில் அமர்ந்துதான்! நானும் அவரைப் போலவே உட்கார்ந்து கொள்வேன்."
"உங்கள் கெஸ்ட் தனியாக வர வேண்டுமா... குடும்பத்துடனா?"
"அந்த அம்மாவோடு (கஸ்தூரிபா காந்தி) உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றும் எனக்குக் கொள்ளை ஆசை. அதனால், அம்மாவுக்கு உடம்பு சரியாக இருந் தால், அவர்களையும் அழைத்து வாருங்கள் என்று கேட்டுக் கொள் வேன்."
"மெனு என்னவாக இருக்கும்?"
"காந்திக்குப் பிடித்தமான வேர்க்கடலையும் ஆட்டுப்பாலும்தான் மெனு. எனக்கும்கூட அதுதான். முடிந்தால், உடனுக்குடன் பால் கறந்து கொடுக்க, ஆரோக்கிய மான ஆட்டைக்கூட அருகில் வைத்துக் கொள்ளக்கூடும். இந்த டின்னர் ருசிக்காக அல்ல; ஆத்ம பசிக்காகத்தானே!"
"டின்னரின்போது அவரிடம் என்ன பேசுவீர்கள்?"
"அவரிடம் நிறையக் கோள்மூட்டுவேன். 'நீங்க என்னெல்லாம் நினைச்சீங்க. நாடு எப்படியெல்லாம் இருக்கணும், அரசியல் வாதிகள் எந்த மாதிரியெல்லாம் இருக்கணும்னு நீங்க நினைச்சுக் கிட்டிருந்தீங்களோ, கனவு கண் டீங்களோ, ஆசைப்பட்டீங்களோ, அந்த மாதிரியெல்லாம் இப்போது இல்லை. உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள். இதுவரைக் கும் நீங்கள் உயிரோடு இருந்திருந் தால், கோட்ஸே உங்களைச் சுட் டிருக்க வேண்டியதில்லை. இன் றைய மோசமான நிலைகளைப் பார்த்து உங்களை நீங்களே சுட்டுக் கொள்வீர்கள். அதனால் கோட் ஸேக்கு நன்றி சொல்லிவிட்டு, எல்லாவற்றையும் மறந்துவிடுங் கள்' என்பேன்."
"உங்கள் சந்தோஷத்தை எப்படித் தெரிவிப்பீர்கள்?"
"'உங்களை மாதிரி வியாபாரத்தனமில்லாத மனிதரைச் சந்திப்பதில் ரொம்பச் சந்தோஷம். உங் களை மாதிரி எங்களால் இருக்க முடியாது. எங்க நிலையை உங்க ளிடம் சொல்லி பாவமன்னிப்புக் கேட்க இந்த டின்னர் ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்ததில் எனக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி' என்பேன்."
"டின்னரில் கடைசி அயிட்டம் என்னவாக இருக்கும்?"
"வெளியே சொல்வதில் நான் வெட்கப்படப்போவதில்லை. மற்றவர்களைப்போல நான் பண்டிகைகளைக் கொண்டாட விரும்புவதில்லை. இந்தத் தேசத்துக்குச் சுதந்திரம் வந்த நாளன்று நான், என் மனைவி, குழந்தைகள் விழித்திருப்போம். சுதந்திரம் கிடைத்த நள்ளிரவு நேரத்தில் எங்கள் வீட்டில் கொடியேற்றி, நிமிர்ந்து நின்று, சல்யூட் அடித்து, தேசிய கீதம் பாடுவோம். இது பலருக்குக் கேலியாகத் தெரியலாம். ஆனால், எங்களுக்கு இது பெருமை. நாங்கள் இந்தியர்கள். இந்த உணர்வு என்னுள் வியாபித்து இருப்பதால் டின்னரின் கடைசி அயிட்டம்...
ஜன கண மன..."
http://lh6.ggpht.com/_NQBPenwjOt8/TO...87b%5B1%5D.jpg
Quote
TorryJens
View Public Profile
Find More Posts by TorryJens
All times are GMT +1. The time now is
08:39 AM
.