Thread
:
aravAn - next movie by Vasanthabalan
View Single Post
07-20-2010, 03:53 PM
#
15
doctorzlo
Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் வெளிவந்த நேரத்தில் மேலாண்மைப் பொன்னுச்சாமி அதை
ஆயிரம் பக்க அதிசயம்
எனப் புகழ, எஸ்.ராமகிருஷ்ணன் அதை
ஆயிரம் பக்க அபத்தம்
என விமர்சித்திருக்கிறார்.
வசந்த பாலன் குப்பையை கிளரப் போகிறாரா இல்லை அதிசயத்தை அலங்காரப் படுத்தப் போகிறாரா எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஜெயமோகனது தளத்திலும் இதைப் பற்றிய
கடிதங்களும், பின்னூட்டங்களும்
வந்திருந்தது..
---------------------------------------------
அன்புள்ள ஜெ
நீங்களும் மேலாண்மைப் பொன்னுச்சாமியும் காவல்கோட்டத்தை ஒரு பெருங்காப்பியம் என்று புகழ்கிறீர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அதை ஒரு குப்பை மட்டுமே என்று தன் இணையதளத்தில் சொல்கிறார். நானே வாசித்து உண்மையை அறியலாமென எண்ணுகிறேன்
நெடுநேர கூகிள் தேடலுக்குப் பின்னர் தமிழினி அந்நூலை வெளியிட்டிருப்பதாக அறிந்தேன். அவர்களின் இணையதளமோ தொடர்பு முகவரியோ கிடைக்கவில்லை.
உங்கல் இணையதளத்தில் நீங்கள் கொஞ்சநாள் முன்னர் புத்தகங்கள் விற்காத நிலையைப்பற்றிய உங்கள் ஏமாற்றத்தைச் சொல்லியிருந்தீர்கள். ஆச்சரியமில்லை. இப்படி புத்தகத்தை தேடுவதே கஷ்டமாக இருந்தால் எப்படி புத்தகங்கள் விற்கும்? வாச்கான் ஏமாற்றம் அடையமாட்டானா?
நம் பதிப்பகத்தார் புத்தகங்களை கொன்டுசேர்க்க கற்றுக்கொள்ளவேண்டும்
ஜாஸ் டயஸ்
அன்புள்ள ஜாஸ்,
நல்லது. இதுதான் வாசக ஊக்கம் என்பது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருளை தானே வாசித்து அறிவது.
நான் காவல்கோட்டத்தை மாபெரும் காவியம் என்று சொல்லவில்லை. அது ஒரு முக்கியமான இலக்கிய ஆக்கம், தமிழில் எழுதப்பட்ட வரலாற்றுநாவல்களில் சிறந்தது, அந்த வகைமை தமிழில் இல்லாததனால் அது பல்வேறு வடிவச்சிக்கல்கள் கொண்டதாக இருந்தாலும் தவிர்க்க முடியாதது என்றே சொல்கிறேன். அதை ஏன் சொல்கிறேன் என்றும், ஓரு வரலாற்று நாவலை வாசிக்கும் சாத்தியங்களைப்பற்றியும் பேசுகிறேன்
தமிழில் முக்கியமான எல்லா பதிப்பகத்தாரும் புத்தகங்களை மக்களிடம் கொண்டுசென்றுசேர்க்க இரண்டாயிரம் தொடக்கத்தில் பெரு முயற்சிகளில் ஈடுபட்டார்கள். புத்தகக் கண்காட்சிகள் அவ்வாறுதான் பரவின. ஆனால் வாசகர்களின் ஊக்கமின்மையால் அந்த முயற்சிகள் இப்போது நஷ்டமளிப்பவையாக உள்ளன
இணையத்தில் புத்தகங்களைப் பெற எனி இண்டியன் காம், விருபா காம் , உடுமலை காம் என்று பல இணையதளங்கள் உள்ளன. எல்லா நூல்களும் கிடைக்கும். ஆனால் அவற்றுக்கும் வாசக ஆதரவு மிகமிகக் குறைவு என்பதனால் நடத்த முடியாமல் அவையும் திணறிக்கொண்டிருக்கிறன இதுவே நடைமுறை உண்மை
ஜெ
-------------------------------------------------
Quote
doctorzlo
View Public Profile
Find More Posts by doctorzlo
All times are GMT +1. The time now is
07:19 PM
.