சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் வெளிவந்த நேரத்தில்....... அது ஒரு முக்கியமான இலக்கிய ஆக்கம், தமிழில் எழுதப்பட்ட வரலாற்றுநாவல்களில் சிறந்தது, அந்த வகைமை தமிழில் இல்லாததனால் அது பல்வேறு வடிவச்சிக்கல்கள் கொண்டதாக இருந்தாலும் தவிர்க்க முடியாதது என்றே சொல்கிறேன். அதை ஏன் சொல்கிறேன் என்றும், ஓரு வரலாற்று நாவலை வாசிக்கும் சாத்தியங்களைப்பற்றியும் பேசுகிறேன்