View Single Post
Old 10-31-2011, 03:14 AM   #7
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
58
Posts
4,495
Senior Member
Default
மனோரமா விரைவில் உடல் நலம் பெற்று சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

குளியலறை, கழிவறைகளில் வயதானவர்கள் வழுக்கி விழுவது தற்போதைய கால கட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தலைமுறை ஒரு முக்கிய காரணமாகும். பெரும்பாலான வீடுகளில் அழகுக்குத் தரும் முக்கியத்துவம் பாதுகாப்புக்குத் தருவதில்லை. அதுவும் குறிப்பாக விலையுயர்ந்த மார்பிள் தரை இந்த மாதிரியான ஆபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாய் அமைகிறது. வீடு துடைத்து விடுவதற்கு ஏற்ற தரையாய் அது இருப்பதில்லை. ஈரம் வெகு நேரம் காய்வதில்லை. அதுவும் குளியலறை போன்ற தண்ணீர் அதிகம் பயன்படுத்தும் இடங்களிலாவது தரை சற்று சொரசொரப்பாய் இருந்தால் இந்த மாதிரி விபத்துக்களைத் தவிர்க்கலாம். குறைந்த பட்சம் இந்த மாதிரி இடங்களில் டைல்ஸ் பதிக்காமல் சொரசொரப்பு மிகுந்த வாறு தரையை அமைத்தால் வயதானவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். முடிந்த வரையில் நடப்பதற்கு வேலையில்லாத இடங்களில் மட்டும் மார்பிள்ஸ் பதித்து மற்ற பகுதிகளில் பாலிஷ் போடாத மொசைக் தரைகளை அமைத்தால் பாதுகாப்பானதாக இருக்கும்.
Paul Bunyan is offline


 

All times are GMT +1. The time now is 07:36 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity