Thread: KALAVAANI
View Single Post
Old 07-01-2010, 08:19 AM   #25
9mm_fan

Join Date
May 2007
Age
54
Posts
5,191
Senior Member
Default
Kumudam Review

கிராமத்துக் கதை. ஆனால் தற்போதைய தமிழ்த் திரையுலக தலையெழுத்தைப் போல் மதுரையில் நடக்கும் கதை கிடையாது. மன்னார்குடி பக்கம் நடக்கிறது.

மன்னார்குடி என்பதால் ஏகப்பட்ட சொத்தும் செல்வச்செழிப்பும் கிடையாது. எளிமைதான் படத்தின் அடிப்படை. படத்தில் ரிக்கார்ட் டான்ஸ் இருக்கிறது. ஆனால் நடன நடிகையின் உடலை மோப்பம் பிடிக்கும் கேமரா கிடையாது. அருவாள் இருக்கிறது, கிராமங்களுக்கிடையே பகை இருக்கிறது. ஆனால் அதிர்ச்சியில் கண்களை மூட வைக்கும் ரத்தம் தெறிக்கும் வன்முறை கிடையாது.

அப்புறம் படத்தில் என்ன இருக்கிறது? யதார்த்தமான கதாபாத்திரங்கள். படம் முழுவதும் சிரிப்புடன் நம்மை உட்கார வைக்கும் திரைக்கதை.

பகையிலிருக்கும் பக்கத்து கிராமத்துப் பள்ளிக்கூடப் பெண்ணைக் காதலிக்கும் ஹீரோ, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதுதான் கதை.

ஹீரோவாக ‘பசங்க’ விமல். நடிப்பு இயல்பாய் வருகிறது. கிராமத்து தறுதலையை கண் முன் கொண்டு வருகிறார். அவரது நண்பர்களும் அப்படியே.

ஹீரோயின் மலையாளத்து இறக்குமதி ஓவியா.குழந்தைத்தனமாய் இருக்கிறார். எல்லோரும் கிராமத்து முகங்களுடன் இருக்க, இவரிடம் மட்டும் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகியின் நடிப்பு வந்துவிட்டது.

மகனை பாசத்துடனும் பயத்துடனும் பார்க்கும் பரிதாப அம்மா சரண்யா. ‘ஆவணி தாண்டுனா ‘டாப்’பா வந்துருவான்’ என்ற ஜோதிட நம்பிக்கையில் மகனுக்கு செல்லம் கொடுப்பதும் துபாயிலிருந்து திரும்பும் கணவனிடம் மகனுக்காக நாடகமாடுவதும் கலகலப்பு.

துபாய் அப்பாவாக இளவரசு. படத்துக்குப் படம் நடிப்பில் மெருகேற்றிக்கொண்டே இருக்கிறார்.

பரிதாப பஞ்சாயத்தாக கஞ்சா கருப்பு. அவரை வைத்து கிராமத்து இளைஞர்கள் செய்யும் காமெடி தியேட்டரை அதிர வைக்கிறது.

அண்ணனாக வரும் புதுமுகம் திருமுருகனை இனி பல படங்களில் வில்லனாகப் பார்க்கலாம்.

கேமரா ஓம் பிரகாஷும் இசை எஸ்.எஸ்.குமரனும் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள்.

இவர்கள் எல்லோரையும் விட படத்தின் நிஜ ஹீரோ இயக்குநர் சற்குணம். முதல் படமாம். நம்ப இயலவில்லை. அதிக செலவு இல்லாமல் பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் கதை சொல்லும் விதத்தை மட்டுமே நம்பிப் படமெடுத்திருக்கிறார். நம்பினோர் நலிவதில்லை.

பருத்தி வீரன், பசங்க திரைப்படங்களை நினைவுபடுத்தும் காட்சியமைப்புகள், படத்தில் இருக்கும் லாஜிக் ஓட்டைகள். பள்ளி மாணவி வெட்டி இளைஞனைக் காதலிப்பது, குடிப்பதும் பெண்ணைக் கடத்துவதும் சாதாரண செயல்கள்போல் காட்டுவது போன்ற உறுத்தல்கள் இருந்தாலும், களவாணி, களவாடிவிட்டான் இதயத்தை..
9mm_fan is offline


 

All times are GMT +1. The time now is 08:31 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity