Thread
:
KALAVAANI
View Single Post
07-03-2010, 04:24 AM
#
29
Lt_Apple
Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
விமர்சனம்-களவாணி
உரம், விவசாயம், ஊடால காதல்னு அழகான கதையும் அற்புதமான பிரசன்டேஷனுமாக வந்திருக்கிறார் புது இயக்குனர் சற்குணம்! இதுவரைக்கும் எங்கெங்கேயோ சறுக்குன தயாரிப்பாளர்கள் இனி இவர் பக்கம் மைய(ல்)ம் கொள்ளலாம்.
துபாய்க்கார அப்பாவுக்கு துடுக்கான பிள்ளை விமல். வெட்டி வேலை, வீம்பு சண்டை, சாயங்கால சரக்கு என்று ஊதாரியாக திரிகிறவருக்கு, பக்கத்து கிராமத்திலிருந்து பள்ளிக்கு வரும் ஓவியா மீது காதல். ஆனால் ஓவியாவின் அண்ணனுக்கும் விமலுக்கும் ஜென்ம பகை. சந்தர்ப சூழ்நிலை விமலை மேலும் கெட்டவனாக்க, வெட்டு குத்தாகிறார்கள் வருங்கால மச்சான்கள். இவ்வளவையும் மீறி இணைந்தார்களா ஜோடி என்பது க்ளைமாக்ஸ். ஏ.வெங்டேஷ், பேரரசுகளுக்கு இப்படி ஒரு கதை கிடைத்தால் தியேட்டர் கேண்டீனில் கூட பிளாஸ்திரியும், டெட்டாலும்தான் விற்று தொலைந்திருக்கும். ஆனால் சற்குணத்தின் ட்ரீட்மென்ட்டே தனியாக இருக்கிறது.
LC 112 என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு இவர் எழுதியிருக்கும் புதுக்கவிதை இன்னும் கொஞ்ச நாளைக்கு தஞ்சாவூர் பக்கம் தண்ணீராக ஓடினாலும் ஆச்சர்யமில்லை. ஊர் முழுக்க இதை எழுதி போட்ருவேன் என்று மிரட்டியே ஓவியாவை 'கட்டிக்கிறேன்'னு சொல்ல வைக்கிற விமல், அப்படியே ஒரு நடை ஓவியாவின் அப்பாவிடமே போய் 'மேற்படி ரக நெல்லு இருக்கா' என்று சதாய்ப்பது செம கரைச்சல். காரின் பின் சீட்டில் இருப்பது அப்பா என்பது தெரியாமலே தனது வீர தீர கதையை சொல்லி மாட்டிக் கொள்வதும், ஓவியா நட்டுவிட்டு போன நாலு கொத்து நாற்றை மட்டும் செம்மையாக 'கவனித்து' அதன் வளர்ச்சியில் தன் காதலை வளர்ப்பதுமாக பின்னி எடுத்திருக்கிறார் விமல்.
இதே இந்த கதைக்காகவே பெத்து போட்ட மாதிரி இருக்கிறார் ஓவியாவும். போதையில் தன் கண்ணெதிரிலேயே அத்தை மகளை கடத்திப் போகும் விமலை பார்த்து பேஸ்த் அடித்துப் போய் நிற்கிற காட்சியில் சூடு பிடிக்குது கதை. இளசுகளின் 'கடலைக்கு' இடையூறாக வரும் சிறுவனுக்கு கண்ணை கட்டி கண்ணாமூச்சு ஆட விடுவதெல்லாம் கலகலப்பான காதல் பொதுமறை!
அவ்வப்போது விமல் கோஷ்டியின் அரவையில் சிக்கி 'நொந்தாமிர்தம்' ஆகிறார் கஞ்சா கருப்பு. இவரது காதுபடவே 'பஞ்சாயத்து காலமாகிவிட்டார்' என்று மைக்கில் அறிவிப்பதை கேட்டு திடுக்கிடுகிற போதெல்லாம் கைதட்டல்களால் திடுதிடுக்கிறது தியேட்டரும்.
அகன்ற கண்களில் ஆச்சர்யம் கோபம் பரிதாபம் என்று ஏகப்பட்ட படங்களை ஓட்டுகிறார் சரண்யா. 'என் புள்ளைக்கு கிரகம் சரியில்ல. ஆவணி வந்தா டாப்புல போய்டுவான்' என்று நம்பிக்கை காட்டுகிறாரே, அற்புதம்! பிள்ளைக்காக துபாயிலிருந்து வாங்கி வந்த லேப் டாப்பை வேஸ்ட்டா போச்சே என்று கோபத்தோடு விற்க முயலும் இளவரசுவிடம், சூழ்நிலை தெரியாமல் விமல் மாடு மேய்க்க போவதை சொல்லி சரண்யா சிலாகிக்கிற காட்சி கலகலப்பு கலவரம்ப்ப்பா
வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கும் திருமுருகனின் ஓங்கு தாங்கான உடம்பு ஒன்றே போதும். அதையும் மீறி நடிப்பும் வருவதால் புதுமுக வரவில் தனிமுகம் காட்டுவார்.
காட்சிகளுக்கு தோதாக துண்டு துண்டாக எஸ்.எஸ்.குமரன் போட்டிருக்கும் சின்னஞ்சிறு பாடல்களும் பின்னணி இசையும் டாப் என்றால், டம்மா டம்மா பாடல் தனி அட்ராக்ஷன்! விருந்துக்கு பேர் போன தஞ்சையையே தலைவாழை இலையில் வைத்து பரிமாறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.
பாக்யராஜூக்கு பிறகு திரைக்கதையில் சென்ட்டம் அடித்திருக்கிற டைரக்டர் சற்குணத்தை 'மனசை திருடிய களவாணியே' என்று பாராட்டலாம். தப்பேயில்லை!
-ஆர்.எஸ்.அந்தணன்
http://www.tamilcinema.com/CINENEWS/...0/kalavani.asp
Quote
Lt_Apple
View Public Profile
Find More Posts by Lt_Apple
All times are GMT +1. The time now is
02:56 PM
.