View Single Post
Old 08-25-2006, 07:00 AM   #4
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default
An old post. Just re-posting because it might be pertinent (pertinent-ngrAru). After much thought about NK I think PithAmagan is still BAlA's best, purely in cinematic terms.
பிதாமகன் - கடவுளும் குழந்தையும்
தலைப்பிலே எந்த இரண்டு உறவுகளை படம் அலசுகிறது என்று தெரிந்து விடுகிறது.
அசுர வளர்ச்சி அடைந்த குழந்தையென சித்தனைக் கொள்ளலாம். அவனுக்கும் சமூகத்தை அவனுக்கு அறிமுகப் படுத்தும் முதல் ஆணான சக்திக்கும் உள்ள பித்ருத்துவ உறவு என படத்தைக் கொள்ளலாம். முதலில் பரிவும், உணவும் ஊட்டுபவள் தான் தாய் - கோமதி. அவனை சமூகத்தின் போலித்தனத்திலிருந்து பொறுப்பாக காப்பவன் தந்தை - சக்தி. போதையிலும், காவல் துரையின் கம்படியிலும் சக்தி தடுமாறும்போது சித்தனை தோள் கொடுக்க செய்து மகனே பிதாவாகிடும் நிலையையும் படம் உணர்த்திவிடுகிறது.
[உபயம் equanimus] உணவு முடிந்து கை கழுவும் குழந்தை சித்தனிடம் தண்ணி ஊற்றும் கஞ்சா குடுக்கி ஒரு வேண்டுகோள் விடுக்கிறான். "அண்ணே என்னைய கொஞ்சம் ஞாபகம் வெச்சுக்கோங்க. கூடிய சீக்கிரம் என்னைய அங்க கொண்டுகிட்டு வந்துருவைங்க.எரியும்போது முறுக்கேறி எழுந்திரிசிபுடிச்சா அடிச்சுபுடாதீங்க. தாங்கமாட்டேன். அதட்டுங்க, படுத்துகுடுவேன்". இது ஒரு வெட்டியானிடம் உறைப்பதாகவே தெரியவில்லை. கடவுளிடம் கோருவதாகவே எனக்கு தெரிந்தது - குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றல்லவா? ஒரு கஞ்சா குடுக்கிக்கு உள்ள அடக்கமும், வாழ்க்கை புரிதலும் சமூகத்தில் உள்ள சில சராசரி மனிதர்களுக்கு இல்லாமல் பொய் விடுகிறது.

எல்லோருக்கும் தந்தையான ஆதி மனிதனெனவும் சித்தனைக் கொள்ளலாம். அவனிலிருந்து எவ்வளவு விலகி வந்து விட்டோம் என்று இன்றைய சமூகத்தின் மறதி நிரூபித்துவிடுகிறது. பரோட்டாவை பங்கிடுவதற்கே பயப்படுகிறது. இதில் "நாரப்பய ஊர்" மீது பழி வேறு. பல்வேறு காரணங்களால் ஊரை விட்டு தள்ளி வைக்கப் பட்டவளாகவே வாழ்ந்த போதிலும் ஊரை வைதவனை திருப்பி வைகிறாள் கோமதி. சமூகம் தள்ளி வைத்தவளுக்கு தான் அதன் மேல் எத்தனை பரிவு! அதே பரிவு சித்தனிடமும் காட்டுகிறாள். காலபோக்கில் பரிவு காதலாகவும், தாய் தாரமாகவும் மாற முற்பட்டு எல்லாம் கூடி வரும் வேளையில் குடி மூழ்கிப் பொய் விடுகிறது. இளையராஜாவும் தனது இசையால் இந்த எடிபல் (oedipal) உறவை உணர வைக்கிறார்.
படத்தின் துவக்கத்தில் கருப்பு வெள்ளையில் ஒரு கருவுண்ட பெண் மயான பூமியை அடைகிறாள். பிரசவ வலி அவளை தாக்கும் பொழுதே அது வரை வந்த பின்னணி இசையில் மாற்றங்கள் புகுத்தி விடுகிறார் இசையராஜா. ஒரு சூரியகிரணத்தின் இடைவெளியில் ஒரு மகனைப் பிரசவித்து அவள் மாண்டு போகும் முன் பின்னணி இசை மாற்றமடைந்து முற்றும் பெற்று விடுகிறது. அவன் பிறந்தவுடன் உலகமெலாம் நிரமுற்று நிற்கிறது அனால் அவன் வாழ்வில் உறவின் இசை இல்லை. அந்த இசையும் உறவும் மறுபடி கோமதியை சந்திக்கும் பொழுது தான் திரும்ப வரும். குறிப்பாக உணவு உண்டு கோமதியை சித்தன் பின் தொடரும் பொழுது பின்னணியில் சித்தனை தரித்த தாய்க்கு கொடுத்த அதே இசையை அங்கும் பொருத்துகிறார் ராஜா. பிராய்டு (Freud) சந்தோஷப்படுவார்.
Peptobismol is offline


 

All times are GMT +1. The time now is 04:54 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity