People who had seen Nan Kadavul might recall this girl Kuruvi in the movie. More about her in this post by dialogue writer of this movie and author Jayamohan. Some excerpts ‘நான் கடவுள்’ படப்பிடிப்புக்காக தேனி சென்றிருந்தபோதுதான் மதுபாலாவைப் பார்த்தேன். டைரக்டர் இருக்கைக்கு அருகே ஒரு சிறிய நாற்காலியில் கையில் ஒரு மிட்டாயுடன் அமர்ந்திருந்தாள். வட்டமான முகம். சிரிக்கும்போது இடுங்கும் கண்கள். சிறிய குழந்தைப் பற்கள். மூன்றடி உயரம் இருக்கும். கைகள் கால்கள் எல்லாமே குழந்தைகள் போல குண்டுகுண்டாக இருந்தன. ஒருவயதுக்குழந்தை ஒன்று இரண்டுமடங்கு வளர்ச்சி அடைந்துவிட்டது என்றுதான் முதலில் நினைத்தேன். இல்லை, மதுபாலாவுக்கு வயது பதினேழு. மதுபாலாவின் பாட்டி படப்பிடிப்பில் ஓரமாக இருப்பாள். பள்ளிக்குச் செல்லும் தம்பி படப்பிடிப்புச் சாப்பாட்டுக்காக மதியம் ஓடிவந்துவிடுவான். அக்காவும் தம்பியும் என்று சொல்லவேண்டும். அவன் மதுபாலாவை விட ஆறேழு வயது இளையவன். ஆனால் மதுபாலாவுக்கு ஏது வயது? அண்ணன் என்றுதான் சொல்வோம். அவர்கள் மிக நெருக்கம். அண்ணன் அருகெ எஇருந்தால் மதுபாலா பிறருக்கு அண்ணைச் சுட்டிக்காட்டியபடியே இருபபள். அவன் எனன் செய்தாலும் சிரிப்பாள். எப்படியோ அந்த குழுவில் பாலாதான் முக்கியமானவர் என்று அவளுக்கு புரிந்து விட்டது. பாலா அவளைக் கொஞ்சுவது இல்லை. அவருக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை. ஆனால் சின்னக்குழந்தைகள் கண்களை நோக்கியே பிரியத்தைக் கண்டுகொள்கின்றன. மதுபாலா எப்போதும் பாலா அருகிலேயே இருக்க விரும்புவாள். மதுபாலா படப்பிடிப்பில் இருக்கும் தகவல் தெரிந்ததும் அவள் தகப்பன் அவளுக்கு கூலிபெற்றுச் செல்ல தேடி வந்தான் . பாட்டியிஅம் வந்து பணம் கேட்டு அடம்பிடிக்கிறான் என்று தெரிந்ததும் அவனை உடனே தன்னிடம் வரும்படி பாலா சொன்னார் . ஆள் நல்ல புத்திசாலி. அப்படியே தாவி பாலம் வழியாக தப்பி ஓடிவிட்டான்.