View Single Post
Old 04-19-2011, 04:32 PM   #29
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default
Compli, முதல் கட்டுரையை வாசித்தேன். நன்றாக இருந்தது. முடிவுரை நெஞ்சைத் தொட்டது. இவர்கள் மூவரையும் ஒரு சராசரி ரசனைத் தளத்திலிருந்து ரசித்து வந்த ஒரு சராசரி ரசகனான எனக்கு உங்கள் கட்டுரையில் சில எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. ஏசுதாசைப் பற்றி சொல்லுகையில் அவரது குரல் வெளிப்படுத்திய சோக ரசத்தின் தனித்துவம் முக்கியமான ஒன்று. அது கட்டுரையில் பதிவுச் செய்யப்படவில்லை. இலங்கை, திருச்சி வானொலி ஒலிபரப்பில் என் ஜீவன் பாடுது, ஊரைத் தெரிஞ்சிகிட்டேன், கண்ணே கலைமானே, வாழ்வே மாயம், ஏரிக்கரை பூங்காற்றே, சின்ன சின்ன ரோஜாப் பூவே என நிறைய பாடல்கள் மக்களால் தொடர்ந்து விருப்பப் பாடல்களாக.. "ஏசுதாசின் சோகப் பாடல்கள்" என மலிவுவிலையில் நிறைய நந்தி கேசட்டுக்கள் எண்ணற்ற எண்ணிக்கையில் தமிழகம் முழுவதும் எண்பதுகளில் விற்கப்பட்டிருக்கிறது. அவரது கர்நாடக இசைப்புலமையால் மேன்மையடைந்த பாடல்களின் தாக்கத்தை விட இதில்தான் ஏசுதாஸ் தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பது என் பார்வை. ம.வாசுதேவனை பற்றி எழுதும் போது, " " என்ற கல்யாண ராமன் பாடல் குறிப்பிடப் படவேண்டிய ஒரு பாடல். அந்தப் பாடல், தமிழகம் முழுவதும் அவர் பெயரை போஸ்டர் அடித்து ஒட்டி, பிரபலமாக்கியது. ஒரு வெகுளியின் காதலை ஒரு பாடகர் தனது குரலால் இந்த அளவுக்கு வெள்ளந்தியா பாடியிருக்க முடியாது.
Drugmachine is offline


 

All times are GMT +1. The time now is 08:55 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity