Thread
:
KADHAL SOLLA VANDHEN *YUVAN*BOOPATHYPANDIAN*
View Single Post
08-14-2010, 04:00 AM
#
18
Lillie_Steins
Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
நடிப்பு: பாலாஜி, மேக்னா, சபேஷ் கார்த்திக், ஆர்.சுந்தர்ராஜன், தம்பி ராமையா
ஒளிப்பதிவு: ராணா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்கள்: நா.முத்துக்குமார், சாரதி
தயாரிப்பு: சி.ஜெயகுமார்
கதை, வசனம், இயக்கம்: பூபதி பாண்டியன்
"செருப்பால நீ அடிச்சாலும், உன்னைத்தான் காதலிப்பேன். அப்பேர்பட்ட பரதனே செருப்பை தலைமேல வச்சுக்கிட்டு போகலயா? அதனால உனக்கு விருப்பமில்லேனாலும் நீ என்னைத்தான் காதலிக்கணும். இல்லேன்னா செத்திருவேன்" என்று சக மாணவியை மிரட்டி பணிய வைக்கிற டைப் பையனின் லவ் ஸ்டோரி. அவன் என்ன ஆகிறான் என்பதுதான் கதை.
இயக்குநர் பூபதி பாண்டியன் அவருக்கே உரிய ஸ்டைலில் காமடியைக் கலந்து சொல்லியிருக்கிறார். கல்லூரி சீனியர்ஸ் தங்களின் காதலை சொல்றதுக்கு ஜூனியர்ஸை ஏன் தூது அனுப்புறாங்களோ...? அதிலும் படத்தில வருகிற சிங் இப்படியெல்லாமா மொக்கையா இருப்பான்? பல்பு கொடுத்திட்டீங்களே, பாஸ்!
சபேஷ் கார்த்திக், தம்பி ராமையா இருவரும் மெயின் காமடி பீஸ் என்றாலும் அங்கங்கே சில கேரக்டர்கள் மூலமாகவும் காமடி வெடிக்கிறது. எதற்கெடுத்தாலும் கையை ஓங்கியபடி எழுந்திருக்கிற வழுக்கை நண்பரின் ஆவேசத்தை அவரின் பூனைக்குரலால் புஸ்வாணம் ஆக்கியிருப்பது ரகளை!
"பட்டாபட்டி டவுசர் பையனா இருக்கிறான், இவன் போயி வயசில மூப்பா இருக்கிற பெண்ணை டாவடிக்கிறானே, ஜெயிப்பானா.." என்கிற எண்ணம் வரவேண்டும் என்பதற்காகவே நாயகன்-நாயகி செலக்ஷன். சூப்பர்! பாலாஜி-மேக்னா கச்சிதமா பொருந்தியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் "என்னை அக்கான்னே கூப்பிடு" என்று நாயகி மேக்னாவையும் சொல்ல வைத்திருக்கிறார். நச்!
பாலாஜியின் நண்பன் சபேஷ் கார்த்திக் படத்தின் காமடிக்கு குன்று அளவுக்கு பலம். கூடுதல் அட்ராக்ஷன் தம்பி ராமையா. படத்தில் காமடி சைடு பக்காவாக இருக்கிறது. பாலாஜியின் காதலை 'இம்பாச்சுவேஷன்' எனச் சொல்லலாம். சரியாகச் செய்திருக்கிறார். மன்னிப்புக் கேட்பதும் பின்னர் அதை மறுப்பதும் போன்ற சீன்களில் யதார்த்தம்.
மேக்னா புதுவரவு. அலட்டிக் கொள்ளாமல் அவரது கேரக்டரை நிறைவு செய்திருக்கிறார். யதார்த்தமாக பழகப்போய், அவனோ பதார்த்தமாக தன்னை பார்க்கிறானே என்கிற வெறுப்பில் லாட்ஜ் வைத்தியம் செய்ய நினைத்தால் அந்த பக்கி அதிலும் சென்டிமென்ட் போடுகிறானே என்று நினைத்து கலங்குவது நச்!
ஒளிப்பதிவு ராணா. ஒளிமயமாகத் தெரிகிறது எதிர்காலாம். டைட்டிலிலேயே கொடியேற்றிவிடுகிறார் யுவன். நா.முத்துக்குமாரின் வளமான வரிகளுக்கு உயிர்ப்பு கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறது கார்த்திக்கின் குரல்.'அன்புள்ள சந்தியா' டாப்.
மனைவிக்கு உயிர்போகிற நிலைமை. கர்ப்பிணியை காப்பாற்ற வேண்டுமென்கிற கவலையே இல்லாமல் ரெகுலர் பயணியின் உயிர்மீது கவலைப்படுகிற ஒரு டிரைவரின் கேரக்டர் கிளைமாக்ஸில் பரபரப்பை பற்ற வைக்கிறது என்றாலும் எதார்த்த மீறல். தனக்கு கிடைக்கமாட்டாள் என்பது உறுதியாகத் தெரிந்தபிறகும் உன்னைத்தான் காதலிப்பேன் என்று நாயகன் பிடிவாதம் பிடிப்பதால் எரிச்சலாகிப் போகிறார்கள் ஆடியன்ஸ். நீளம்..! அதனால் கிளைமாக்ஸில் வலி இல்லை. பரிதாபம் மேலோங்குகிறது.
Quote
Lillie_Steins
View Public Profile
Find More Posts by Lillie_Steins
All times are GMT +1. The time now is
12:53 AM
.