This is an interesting remark (+ve to the movie): இன்னொரு குறிப்பு: ராக்கெட், நவீன ரக ஆயுதங்கள், கம்பியூட்டர் மூலமாக இயக்குவது என்று அறிவியலின நவீன கண்டுபிடிப்பு குறித்து படத்தில் நிறைய வருகிறது. இப்படி வந்தால் அதுபற்றி எல்லாம் தெரிந்த ஒரே அறிவாளி சுஜாதாதான். அவருதான் இதை எல்லாம் சரியா செய்வாரு என்று ஒரு பொய் தமிழ் அறிவாளிகள் மற்றும் சினிமா உலகில் பரப்பப்பட்டிருக்கிறது. அது பொய்தான் என்பதை இந்தப் படத்தில் சிறப்பாக நிரூபித்திருக்கிறார்கள். இதற்கு முந்தைய சுஜாதா பங்களிப்போடு கமல் நடித்து வந்த ‘விக்ரம்’ போன்ற கோமாளித்தனமான படங்களோடு ஒப்பி்ட்டால், இந்தப் படத்தில் அந்தச் செய்தி அதைவிட சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சுஜாதா போன பிறகு அவர் வேலையை செய்கிற, (அதாங்க அடுத்தவங்க ஆங்கிலத்தில் எழுதியதை மொழிபெயர்த்து தன் பெயரில் போட்டுக் கொள்கிற வேலை.) மதன் போன்றவர்களை இந்தப் படத்தில் பயன்படுத்தாமைக்கு நமது நன்றியையும் வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறோம்