View Single Post
Old 03-11-2010, 02:43 PM   #19
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
Where's Joe and his Vijayakanth encounter?
அப்படி ஒரு சம்பவத்தை மறந்தே போய்விட்டேன்

எங்கள் கிராமத்து பள்ளியில் 6 வது அல்லது 7வது வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம் .அது ஒரு ஞாயிற்றுக்கிழமை .ஞாயிறு தோறும் அதே பள்ளியில் ஒரு மணி நேரம் மறைக்கல்வி (catechism) நடைபெறுவது வழக்கம் .வகுப்பில் இருக்கும் போது சிலர் “மக்களே! நம்ம ஊருல சினிமா எடுக்க வந்திருக்காங்களாம்” -ன்னு குசுகுசுக்க மறைக்கல்வியில் மனம் ஒன்றாமல் ,வகுப்பு முடிந்தவுடன் பக்கதிலிருந்த கடற்கரைக்கு பசங்களெல்லாம் ஓடினோம் ..ஏற்கனவே சில வாகனங்களில் வந்திறங்கிய படப்பிடிப்பு குழுவை சுற்றி ஏகப்பட்ட கூட்டம் ..கூட்டத்தின் நடுவே ஒரு கறுத்த காந்தப்பார்வையோடு ஒரு உருவம் .விஜயகாந்த் என சீனியர்கள் சொல்லித் தான் எனக்கு அடையாளம் தெரிந்தது .’தண்டனை’ என்றொரு படம் அப்போது வந்திருந்ததென நினைக்கிறேன் . எல்லோரும் விஜயகாந்துக்கு கை கொடுத்துக்கொண்டிருந்தார்கள் .நானும் போய் கைகொடுத்தேன் ..அனைவருக்கும் சிரித்துக்கொண்டே கைகொடுத்துக்கொண்டிருந்தார் . சிறிது நேரத்தில் கூட்டத்தை ஒருவாறு ஒதுக்கி விட்டு கடற்கரையிலேயே ஒரு சண்டைக்காட்சியை படம் பிடித்தார்கள் .நடிகர் ராஜேஷ் இருந்தார் . முதலில் ஆர்வமாக இருந்த கூட்டம் ஒரு காட்சியை 9 தடவை திரும்ப திரும்ப எடுப்பதை பார்த்து சலிப்பு கொட்ட ஆரம்பித்தது .திடீரென்று இன்னொரு வாகனம் வர ,அதிலிருந்து மொட்டை தலையுடன் ஒருவர் இறங்கினார் .”மக்களே! தங்கைக்கோர் கீதம் படத்துல பைக்ல வருவாரே ..சத்தியராஜ்” என சிலர் கிசுகிசுக்க அவருக்கும் கொஞ்சம் கூட்டம் சுற்றி நின்று கைகொடுத்தது.

மதியத்துக்கு பின்னர் ,ஊரின் இன்னொரு பக்கமுள்ள கடற்கரையில் நடிகை ஒருவர் வந்திருப்பதாக செய்தி வர ,எல்லா கூட்டமும் அங்கே ஆஜர் ..ஈர்க்குச்சி போல ஒல்லியாக சிவப்பாக பாவாடை தாவணியில் ஒரு சின்னப் பெண் .பெயர் நளினி என்றார்கள் ..அப்போது அவர் இருந்த தோற்றத்தையும் ,இப்போது அவர் இருக்கும் தோற்றத்தையும் நினைத்தால் நம்பவே முடியவில்லை .விஜயகாந்தையும் ,சத்தியராஜையும் அம்போவென்று விட்டுவிட்டு கூட்டம் நளினியை பார்க்க கும்மோ கும்மென்று குவிய கட்டுப்படுத்தவே பெரும்பாடு .இங்கே கடலுக்கு அருகே நளினி சோகமாக பாடிக்கொண்டு வருவது போல ஷாட் ..இரண்டு வரி எடுப்பதற்குள் விடிந்து விடும் போலிருந்தது.

அடுத்த நாள் விஜயகாந்த் சண்டைக்காட்சிகள் ரோட்டில் படப்பிடிப்பு தொடர ,நேற்று அம்மிய கூட்டம் சுத்தமாக காலி ..ஏதோ எங்கூரு காரர் மாதிரி திண்ணை திணனையாக உட்கார்ந்து விஜயகாந்த் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு தண்ணீர் வாங்கி குடிக்க ,கொஞ்சம் பாவமாகத் தான் இருந்தது.

ஆங் ..படத்தின் பெயரா? சந்தோஷக்கனவுகள் .படம் வெளிவந்த போது நம்மூரில் எடுக்கப்பட்ட படமாச்சேண்ணு அடம் பிடிச்சு அம்மா நாகர்கோவிலுக்கு கூட்டி சென்று படம் பார்த்தோம் ..என்னத்த சொல்ல
Raj_Copi_Jin is offline


 

All times are GMT +1. The time now is 11:59 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity