View Single Post
Old 03-11-2010, 05:58 PM   #39
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
58
Posts
4,495
Senior Member
Default
Originally Posted by Kambar_Kannagi Originally Posted by joe Artists I had atleast a word with... MSV ayya , SV sekar ,Naser .
என்ன சொன்னார்/சொன்னீங்க??? Just curious. வளசரவாக்கத்தில் ஒரு வீட்டில் மாடியில் இரு சிறிய குடியிருப்பில் நான் தங்கியிருந்தேன் ..இன்னொன்றில் ஒரு உப்புமா சினிமா கம்பெனி இருந்தது ..மலையாளி ஒருவர் சினிமா தயாரிக்கப்போவதாக சொல்லிக்கொண்டு அங்கே தங்கியிருந்தார் .ஒரு நாள் அந்த வாசலை கடந்து எங்கள் பகுதிக்கு போன போது உள்ளே எம்.எஸ்.வி ஐயா ,மற்றும் இலங்கை நெய்னார் (இலங்கையில் முதன் முதலில் எம்.ஜி.ஆர் மன்றம் ஆரம்பித்தவர்) இருவருடனும் பேசிக்கொண்டிருந்தார் .நான் எம்.எஸ்.வி ஐயா வெளியே வரும் வரை காத்திருந்து வந்தவுடன் வணங்கி “ஐயா !நான் உங்கள் ரசிகன் ” என்றதும் அவரும் வணங்கி விட்டு கையைப் பிடித்துக்கொண்டு நான் என்ன செய்கிறேன் என விசாரித்தார் ..பின்னர் “பார்க்கலாம் தம்பி” என சொல்லிவிட்டு கிளம்பினார் ..உண்மையிலேயே அத்தகைய மேதையிடம் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஜோ...

அனைவரது அனுபவங்களையும் கேட்பதற்கு சந்தோஷமாக உள்ளது.

AB, உங்களுடைய அனுபவம் தான் சற்று அதிர்சியாக இருக்கிறது. :P
Paul Bunyan is offline


 

All times are GMT +1. The time now is 11:59 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity