பாரதிராஜா நல்லாப்பாடல் காட்சிகளைக்காட்டினால் அதிசயமா? அநியாயத்திலும் அநியாயம் இது முதல் மரியாதை மாதிரியெல்லாம் பாடல்களும் கதையோட்டமும் இணைந்து செல்லுவது அவர் மாதிரி சிலருக்கு மட்டுமே முடிந்த கலை. சும்மா MTV வீடியோ மாதிரி எடுத்து கதைக்கோ படத்துக்கோ ஒரு சம்பந்தமுமில்லாமல் முக்கால் வாசி நேரம் தாளித்துக்கொட்டும் (பார்க்கப்பளபளப்பாக இருந்தாலும் பொருந்தவே பொருந்தாமல் FF செய்ய வைக்கிற) எந்த ஒரு பிற்கால இயக்குநனரையும் விடப்பன்மடங்கு உயர்ந்தவை மஞ்சக்குளிச்சு முதலான ஏகப்பட்ட பாரதிராசா பாடல்கள். பரிதாபமான நடிகர்களான சத்யராஜையும், ரேகாவையும் பலநூறு முறை பார்க்கும்படி கடலோரக்கவிதைகளாக வடிக்க மற்ற கொம்பன்களிடம் சொல்லிப்பாருங்கள், ஓடியே போயிடுவார்கள்!