'அவள் பெயர் தமிழரசி' பற்றி இயக்குனர் மீரா - ஆனந்த விகடனில் அளித்த பேட்டி... ''படத்தில் வேற என்ன விசேஷம்?'' ''ஓவியர் வீரசந்தானம், சமூக சிந்தனையாளர் தியோடர் பாஸ்கரன் போன்ற திறமையானவர்களை இதுநாள்வரை தமிழ் சினிமா பயன்படுத்தவில்லை என்கிற கோபம் எனக்கு உண்டு. அந்தக் கோபத்தை என் படத்திலேயே தீர்த்துக்கொண்டேன். கோபக்கார கலைஞரான வீரசந்தானத்தின் நடிப்பு கொடி கட்டிப் பறக்கிறது. வீரசந்தானம் ஏற்கெனவே சந்தியா ராகத்தில் நடித்திருந்தாலும் சினிமாவை விட்டு நீண்ட காலமாக விலகியே இருந்தவர். இசைக்கு விஜய் ஆண்டனி. ஒரு மாற்று இசைக்குத் தயாராகி, பொறுப்பை உணர்ந்து அழகான இசை யைத் தந்திருக்கிறார். ஒரு நல்ல அனுபவத் துக்குத் தயாராக இருங்கள்!''- பளிச்சென்று சிரிக்கிறார் மீரா