Thread
:
RENIGUNTA
View Single Post
12-05-2009, 01:32 AM
#
6
radikal
Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
ரேணிகுண்டா - விமர்சனம்
பன்னீர்செல்வம் இயக்கத்திலும் கணேஷ் ராகவேந்திர இசையிலும்
வெளிவந்திருக்கும் படம் தான் ரேணிகுண்டா.அஞ்சு புது பசங்க
ஒரு புது கதாநாயகி என்றாலும் கதை என்னமோ பழசுதான்,
ஆனால் அதை எடுத்த விதம் கொஞ்சம் புதுசு.படத்துக்கு பெரிய
பலம் ஒளிப்பதிவாளர் சக்தி,காட்சி அமைப்புகளில் மனுஷன்
மிரட்டுறார்.
நாலு பேர் பக்கா ரவுடி அவர்களுடன் சந்தர்ப்பவசத்தால் சேரும்
அப்பாவி.அதன் பின் அவன் வாழ்வில் வரும் பெண் அந்த பெண்ணால் திருந்தி வாழ நினைக்கும் மற்றவர்கள்... திருந்தினார்களா??வாழ்ந்தார்களா??
ஜானி, இவர் தான் கதையின் நாயகன்.இயல்பாக நடித்து இருக்கிறார்.
படம் முழுவதும் அமைதியாக வரும் இவர் கடைசி காட்சிகளில்
கோபத்தை காட்டுகிறார்.நாயகி ஏதோ பத்தாவது படிக்கும் பெண்
போல இருக்கிறார்.நல்லா அழகா தான் இருக்கா,முகபாவத்தில்
நம்மை கவர்கிறார்.அதுவும் ஜானி மற்றும் அவர்கள் சகாவுடன்
கைதட்டி விளையாடும் சீன் அருமை.
டப்பாவாக வரும் பையன் தான் படத்தின் ரியல் ஹீரோ,மனுஷன்
சும்மா பிச்சு உதறுகிறான்.ஆரம்பத்தில் அவர் ஜெயிலில்
ஆரம்பிக்கும் லொள்ளு மற்றும் நக்கல் பேச்சுக்கள் கடைசி
வரை நம்மை சிரிக்க வைக்கிறது.ஒரு சீனில் கட்டை அவரை
விட நீளமாக இருக்கும் அதை எடுத்து அவனை போட போறேன்
என்று அவர் சீரியஸ்ஆக சொல்லும் போது நமக்கு அந்த கட்டையின்
நீளத்தை பார்த்தால் சிரிப்பு வந்து விடும்.இன்னொரு காட்சியில்
தெலுங்கில் கடலோர கவிதை "அட ஆத்தாடி" பாட்டை கேட்டு
அவர் செய்யும் சேட்டைகள் லக லக லக.....
கேங் தலைவனாக வரும் பையனும் மிக இயல்பாக நடித்து
இருக்கிறார்.ஜெயிலில் ஜானியை அடிக்கும் போலீஸ்காராரை
மிரட்டும் போது தியேட்டரில் செம கைதட்டு.மற்ற இருவருக்கும்
வாய்ப்பு அவ்வளவாக இல்லைஎன்றாலும் கொடுத்த வேலையை
சரியாக செய்து இருக்கிறார்கள்.
ஜானியின் அம்மா அப்பாவை தேவகோட்டையில் கார் ஏற்றி
கொல்லும் போது பொது மக்கள் யாரும் வந்து தட்டி கேட்கவில்லை
என்ற கோபத்தில் இருப்பார் ஜானி.ஆனால் ரேணிகுண்டாவில்
காதலியை பார்க்க ஓடும் போது ஒரு சின்ன சந்து உள்ள ஆட்டோ
இடித்து விடும் அப்போ அவரை பத்து பேர் வந்து தூக்கி
விடுவாங்க இதில் எதுவும் உள்குத்து இருக்கானு டைரக்டர் தான்
சொல்லணும்.
முதல் பாதி மின்னல் வேகம் ஆனால் காதல் காட்சிகள் கொஞ்சம்
அலுப்புட்ட வைக்கிறது.இரண்டாவது பாதியில் நாம் நினைக்கும்
சில காட்சிகள் திரையில் நடக்கும் முக்கியமா கிளைமாக்ஸ்.
படத்தில் வன்முறை அதிகம் அவர்கள் தலையில் அடி வாங்கும்
போது நம் தலையில் அடிப்பது போல் இருக்கிறது.தள்ளாகுளம்
மற்றும் மழை பாட்டு நன்று.
படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது ஒரு கனத்த சோகத்துடன் வெளியே வந்தேன்...ச்சே கடைசியில் காதலர்களை சேர்த்து வச்சிருக்கலாமே என்றும் ஜானி மேல் பரிதாபமும் தோன்றியது.ஒரு வேளை இது தான் டைரக்டர்க்கு கிடைத்த வெற்றி போலும்.
ரேணிகுண்டாவுக்கு தரமான வெற்றி காத்திருக்கு....
http://nee-kelen.blogspot.com/2009/12/blog-post_04.html
Quote
radikal
View Public Profile
Find More Posts by radikal
All times are GMT +1. The time now is
11:49 AM
.