பரத்திற்கு தமன்னா கொடுத்த பரிசு! பரத்திற்கு தமன்னா கொடுத்த பரிசு! பரத் ஒரு முருக பக்தர் என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அது தமன்னாவுக்கும் தெரியும் என்பதுதான் விசேஷம்! எந்த பிரஸ்மீட்டா இருந்தாலும் நடிக்க வரலேன்னா என்னவாகி இருப்பீங்க என்றொரு அரத பழசான கேள்வியை கேட்டு நடிகைககளை நெளிய வைக்கிற ஒரு சில பேனாக்காரர்கள், அதே ஸ்டைலில் இன்னொரு கேள்வியும் கேட்பார்கள் பரத்திடம். உங்க படத்திலே முருக கடவுளோட பேரு டைட்டிலாவோ, உங்க கேரக்டர் பெயராகவோ அமைஞ்சிடுதே...? ஏதோ இந்த கேள்வியை அப்போதுதான் எதிர்கொள்வது மாதிரி முகம் கொள்ளாத சந்தோஷத்துடன் பேச ஆரம்பிப்பார் பரத். “ஆமாங்க. எப்படியோ அமைஞ்சிடுது. பாருங்க, சேவல் என்ற டைட்டில் கூட முருகனோட பறவை சம்பந்தப்பட்டதுதான் என்பார் ஆர்வமாக! அப்புறம் பழனி, ஆறுமுகம்னு எனக்கும் முருகனுக்கும் அப்படி ஒரு ராசிங்க” என்று புளகாங்கிதப்படுவார். சரி, தமன்னா மேட்டருக்கு வருவோம். ‘கண்டேன் காதலை’ படத்தில் நடிக்கும் போது இவருக்கும் பரத்திற்குமான கெமிஸ்ட்ரியில் ஒரே வெளிச்சமாம். பரத்தின் பிறந்த நாளுக்கு தமன்னா கொடுத்த ஒரு கிஃப்ட் பரத்தை ரொம்ப ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. “அவர் கொடுத்த பார்சலை பிரித்தால் உள்ளே முருகன் படம்! எப்படியோ எனக்கு முருக கடவுளை பிடிக்கும்ங்கிறதை தெரிஞ்சு வச்சிகிட்டு தமன்னா கொடுத்த அந்த படம் இப்போ என் வீட்டு பூஜையறையில் இருக்கு” என்றார் பரத். தமன்னாவுக்கு பிடிச்ச கடவுள் சாய்பாபாவாம். அடுத்த கிஃப்ட்டை ரெடி பண்ணிவிட்டு காத்திருக்கிறார் பரத். அதை கொடுக்க டிசம்பர் 21 ந்தேதி வரைக்கும் வெயிட் பண்ணணுமே!