Thread
:
Yester Years Comedians - the lesser famous ones..
View Single Post
02-04-2010, 05:34 AM
#
38
Ifroham4
Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
சந்திரன் < வெ.மூர்த்தி < ஜனகராஜ்
வெ.மூர்த்தி.. பல இடங்களில் வார்த்தைகள் இரட்டை அர்த்தத்தில் இருந்தாலும் ரசிக்கக் கூடியவை. "உள்ளே வெளியே" போலிஸ் கதாபாத்திரம் தான் சட்டென நினைவுக்கு வருகிறது. நகைச்சுவை உணர்வையும் தாண்டி, "முள்ளும் மலரும்" போன்ற படங்களில் இன்னொரு முகத்தைக் காட்டியவர்.
ஜனகராஜ்... கன்னி ராசி, படிக்காதவன், முதல் மரியாதை, அ.சகோதரர்கள், கேளடிக் கண்மணி, வேதம் புதிது, நாயகன் என இவரது திறமைக்கு தீனியாக நிறைய பாத்திரங்கள் கிடைத்தன என்றே சொல்லவேண்டும். கொடுத்த வாய்ப்பை வீணடிக்காமல், பரிமளித்தவர் ஜனகராஜ்.
ஜனகராஜின் "தங்கச்சிக்கு நாய் கடிச்சிடுச்சி" ,
வெ.மூர்த்தியின் "தம்பிர்ர்ர்ர்ரீ" - நினைவில் நிற்கும் வார்த்தைகள்.
எஸ்.வி.சேகர் - மற்றவர்களைக் காட்டிலும், இவரின் அந்தஸ்து சற்று அதிகம். கதாநாயகன், தங்கமணி ரங்கமணி, மணல் கயிறு என படத்தின் முக்கிய, மையக் கதாபாத்திரங்களாக வந்தவர்.
எஸ்.எஸ்.சந்திரனுக்கு தீனி போடும் அளவுக்கு பாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். "ஒண்ணா இருக்க கத்துக்கணும்" என்ற படத்தில் இவரது நடிப்பு நன்றாக இருந்தது.
Quote
Ifroham4
View Public Profile
Find More Posts by Ifroham4
All times are GMT +1. The time now is
11:10 AM
.