View Single Post
Old 10-24-2005, 08:00 AM   #1
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
Originally Posted by equanimus 2. மசாலா படம் 'ங்கறது என்ன? அதிலிருக்கும் கூறுகளை, அதன் அழகியலை, நாம் ஒழுங்காக புரிந்து கொண்டிருக்கிறோமா? இது நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.
இங்கிருந்து ஆரம்பிக்கலாம்: பொதுவாக 'மசாலா படங்கள்'

-->புத்திக்கு அதிக சிரமம் தராதவை
--> பார்வையாளனின் கவனத்தை அதிகம் நம்பாதவை
--> உள்ளர்த்தங்கள் இல்லாதவை.
-->மாறுபட்ட வாசிப்பு சாத்தியங்கள் இல்லாதவை
மறுபார்வையில், வேறெந்த புது அனுபவத்தையையும் தராமல், முதல் முறை பார்த்து அனுபவித்த உணர்வையே (அது 'குதூகல'மாக இருந்தாக வேண்டிய கட்டாயமில்லை) மீண்டும் மேலெழச்செய்பவை பெரும்பாலும் வேறுபடுகிறேன் என்று நினைக்கிறேன்.

முக்கியமாக வேறுபடுவது, நீங்கள் மசாலா படங்களை ஒரு tradition 'ஆக அணுகவில்லை என்பதில். அதாவது, நீங்கள் மசாலா படங்களை வரையறுத்துக் கொள்ளும் விதம் universal 'ஆக உள்ளது. (நம்மவர்கள் எளிமையான அம்சங்களுடன் எடுக்கப்பட்ட Hollywood blockbuster படங்களை Hollywood masala என்பதுண்டு. மேலுள்ள வரையறையின்படி பார்த்தால், அவ்வாறு கூறுவது சரியென்று ஆகிவிடும். ஆனால் அது சரியா என்ன?)

இரண்டாவதாக (முதலாவதாக கூறியதுடன் தொடர்ந்தே இருந்தாலும்), ஒரு வித எளிமைத்தனம் (உள்ளர்த்தங்களும், மாறுபட்ட வாசிப்புக்கான சாத்தியங்களும் இல்லாமை) தான் மசாலா படங்களின் பிரதானமான அம்சம் என்பது போல் ஆகிவிடுகிறது. இதை நிராகரிக்க, உள்ளர்த்தங்கள் உள்ள, (அல்லது மாறுபட்ட வாசிப்புக்கான சாத்தியமுள்ள) மசாலா படங்களை சுட்டிக் காட்டும் சிரமத்தை (கண்டிப்பாகக் கடினம் தான்!) இப்போதைக்கு எடுத்துக்கொள்ள போவதில்லை. நான் கூற வருவது, இந்த மலினப்படுத்துதல் குறிப்பாக மசாலா சினிமாவுடன் சம்மந்தப் படுத்த முடியாது என்று மட்டும் தான் கூறுகிறேன்.
softy54534 is offline


 

All times are GMT +1. The time now is 01:19 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity