View Single Post
Old 11-15-2009, 01:47 AM   #37
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default
விவாதத்தைத் துவங்கும் ஒரு ஆரம்பப்புள்ளியாக முன்வைத்தேன். மரபு (ஜெமொ சொல் alert !) என்று ஒரு இருப்பதால் அது பொதுமைப்படுத்துதலுக்கு அப்பார்ப்பட்டதா ? மரபின் தொடர்ச்சியைப் பற்றி மிகுந்த பிரக்ஞையுடன் அவை உருவாக்கப்படுகின்றன என்று வைத்துக்கொண்டாலும், ஒரு படைப்பை வகைப்படுத்துவதற்கு என் வரையறைகள் ஆரம்பமாக இருக்கலாம் என்றே கருதுகிறேன். இல்லையா ?
சரி தான். மசாலா படங்கள் பொதுவாக இப்படி எல்லாம் இருக்கின்றன என்று கூறலாம் என்று தான் நானும் நினைக்கிறேன். ஆனால் இங்கே அதற்கு மாறாக அதன் சாரத்தைப் பற்றி மட்டும் பேசலாம் என்று தோன்றுகிறது.

'சுப்ரமணியபுரம்' போன்ற ஒரு படம் எந்த விதத்தில் இந்த கூறுகளிலிருந்து மசாலா படங்களை விட விலகியிருக்கின்றது? இது subjective 'ஆன ஒரு கேள்வி தான். (அந்தப் படத்தைப் பற்றி உங்கள் மதிப்பீடு தெரிந்ததானால் என்னால் இந்தக் கேள்வியை முன்வைக்க முடிகிறது.) வரையறைகள் பிரதானமாக qualitative 'ஆக இருப்பதனால் தான் இந்தச் சிக்கல். இதனாலேயே கூட, இந்தத் திசையில் செல்லாமல் இருப்பது உபயோகமாக இருக்குமில்லையா?

Originally Posted by ஈக்வர் இந்த மலினப்படுத்துதல் குறிப்பாக மசாலா சினிமாவுடன் சம்மந்தப் படுத்த முடியாது என்று மட்டும் தான்
கூறுகிறேன்.
எளிமை என்பது மசாலாப்படத்துக்கு தேவையானது, போதுமானது அல்ல (necessary but not sufficient). அன்பே சிவம் மிக எளிய படம். Incidentally, இது நான் போன post 'லயே சொல்ல நினைத்தது. Since this discussion is on "what consitutes masala," I think we can push it more along the lines of identifying/talking about various B => A implications (where A is masala) rather than the A => B implications.
Ifroham4 is offline


 

All times are GMT +1. The time now is 11:15 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity