Thread
:
Vaalmiki by Ananthanarayanan
View Single Post
06-27-2009, 05:18 PM
#
19
Raj_Copi_Jin
Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
வால்மீகி
- தியேட்டர் வாசலில் இருக்கும் பலகையில் "இத்திரைபடத்திற்க்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்க படுகிறார்கள். மீறி சென்றால் நிர்வாகம் பொறுப்பல்ல. ஒரு வாரம் கழித்து வருதல் நலம் அதற்க்குள் இந்த படத்தை அகற்ற முழு முயற்ச்சி எடுக்கப்படும்." கடந்த பல பத்து வருடங்களாகவே ராஜாவின் இசைக்காக இப்படி பல கொடுமைகளை அனுபவித்து வரும் ராஜாசரனம் எனும் இசை ரசிகர் கூறியதாவது "தளராத விக்கிரமாத்தித்தன் போல் மீண்டும் மீண்டும் ஒரு நம்பிக்கையோடு வருகிறோம் ராஜா இசை அமைக்கும் படங்களுக்கு, ஜித்தன் ரமேஷ் நடித்த 'மது' எனும் திரைபடத்தையே முதல் தினம் பார்த்தவன் நான். எஸெமெஸ் என்னும் படத்தை வெளியில் நின்று கொன்டே பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த திரைபடம் போல் உள்ளேயும் உட்கார முடியாமல் வெளியேவும் செல்ல முடியாமல் ஒரு உச்சகட்ட கொடுமையை வேறு எந்த படத்திலும் அனுபவித்தது இல்லை. அதற்க்கு இந்த படத்தின் திரைக்கதையை தான் பாராட்ட வேண்டும், நமக்கு ஏதாவது நல்லது நடந்து விடாதா என நம்பிக்கையோடு காத்திருக்கு வைக்கிறது. ஆணாலும் கடைசி 'பிரேம்' வரை அது நிகழாதது இயக்குனரின் சாமர்த்தியத்தை உனர்த்துகிறது."
மேலும் அவர் கூறியதாவது "60களில் வந்து மாரல் சயின்ஸ் கதைகளை போல் உருக்கி பிழிகிறார் இயக்குனர், ஆனால் நம் கண்கள் தான் பனிக்க மறுக்கின்றன." திரைபடவட்டாரத்தில் விசாரித்த பொழுது எல்லோரும் கிசுகிசுப்பாய் பேசி கொள்வது இதுதானாம் 'எஸ் பிலிம்ஸ்' தப்பித்தது 'விகடன் டாக்கீஸ்' மாட்டி கொண்டது என்று.
Quote
Raj_Copi_Jin
View Public Profile
Find More Posts by Raj_Copi_Jin
All times are GMT +1. The time now is
12:34 PM
.