Thread
:
Vijay and politics
View Single Post
09-10-2009, 07:22 AM
#
23
9mm_fan
Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
ராகுலுக்கு இணையாக விஜய்யா?: அவர் நினைத்தால் தான் ஆட்சியா?
செப்டம்பர் 09,2009,00:00 IST
கோவை: காங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய் சேர்வதற்கு முன்பே, அவரைப் புகழ்ந்து கோவையில் பேனர் வைத்திருப்பது காங்கிரஸ் கோஷ்டிகளிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய், சமீபத்தில் ராகுல் காந்தியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்வார் என்று தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. ஆனால், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் உள்ளிட்ட பல முனைகளிலும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த திட்டத்தை அவர் "கை' விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
அரசியலில் ஈடுபடுவது தொடர்பான தன் முடிவை விஜய் இன்னும் அறிவிக்காத நிலையில், அவரை ராகுல் காந்திக்கு இணையான தலைவராக வர்ணித்து, கோவையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. வால்பாறை எம்.எல்.ஏ., கோவை தங்கத்தின் மகன் விஷ்ணு, இந்த "பிளக்ஸ்' பேனர்களை கோவை நகர வீதிகளில் வைத்துள்ளார். சட்டக் கல் லூரி மாணவரான இவரை, திடீரென மேடையேற்றி, முன்னிலைப்படுத்துவதில் வாசன் கோஷ்டியினரே கோவை தங் கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர். அது மட்டுமின்றி, ஸ்டாலினுடன் இருப்பதுபோலவும், ஸ்டாலின் கை கொடுப்பது போலவும் போஸ்டர் அடித்து, கோவை நகரில் பல இடங்களில் ஒட்டியதிலும் காங்கிரசாருக்கு கடும் அதிருப்தி. இதெல்லாம்போதாதென்று, இப் போது நடிகர் விஜய்யை முன்னிலைப் படுத்தி, இவர் பிளக்ஸ் பேனர்களை வைத்திருப்பது, காங்கிரசாரின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
ராகுல் வருகையை முன்னிட்டு, இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. உப்பிலிப்பாளையம் சிக்னல், கோர்ட் முன்புறம், முன்னாள் படை வீரர் நல அலுவலக முன்புறம் ஆகிய இடங்களில் இந்த பேனர்கள் நேற்று காலையில் வைக்கப்பட்டன. அவற்றில், நடிகர் விஜய்யை வானளாவப் புகழும் வார்த்தைகள் இடம் பெற் றிருந்தன. ஒரு பேனரில், "திருப்பாச்சி நினைச்சா, காங்கிரஸ் ஆட்சி' என்ற வாச கமும், மற்ற பேனர்களில் "விஜய்னா வில்லு, காங்கிரஸ்...' என்ற வாசகங்களும் இருந்தன. காங்கிரஸ் என்பதற்குக் கீழே இருந்த வார்த்தை, வெள்ளை ஸ்டிக்கரால் மறைக்கப்பட்டிருந்தது. விஜய் நினைத்தால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வரும் என்பதைப்போல, வாசகங்கள் இருந்ததைப் பார்த்து, காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப் படைந்தனர். என்ன காரணத்துக்காக, என்ன அர்த்தத்தில் இவை வைக்கப் பட்டன என்பதே புரியவில்லை.
For picture of the cutout :
http://www.dinamalar.com/new/Tnspl_d...p?news_id=5282
Quote
9mm_fan
View Public Profile
Find More Posts by 9mm_fan
All times are GMT +1. The time now is
11:14 AM
.