View Single Post
Old 07-18-2009, 01:14 AM   #34
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
Incindentally, am reading a similar story from Vikatan.

கோடம்பாக்கத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் காதல்!

மேட்ரிமோனியல் வெப்சைட் (மணப் பொருத்தத் தகவல்கள் அளிக்கும் தளம்) ஒன்று ஏற்பாடு செய்திருந்த வரன் களின் மெகா கலந்துரையாடல் அது. கலந்துகொண்ட மணமாகாத ஆண் களிடம், 'உங்கள் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு, 80 சதவிகிதத்தினரின் பதில், 'சினிமா நடிகை சினேகா போல இருக்க வேண்டும்!'

தனது 'ஹோம்லி லுக்' காரணமாக பேச்சுலர்களைப் பேச்சுமூச்சில்லாமல் கட்டிப் போட்டிருக்கிறார் இந்தச் சிரிப்பழகி. கனவுகளில் மட்டும் காட்சி தருபவர்களிடமே அவ்வளவு 'டிமாண்ட்' என்றால், தொட்டுப் பிடிக்கும் தூரத்தில் இருப்பவர்களுக்கு சினேகா மீது எவ்வளவு க்ரேஸ் இருக்கும்?

அதற்கேற்ப, புன்னகை இளவரசியும் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டே இருந்தார். லேட்டஸ்ட்... பிரசன்னா - சினேகா கெமிஸ்ட்ரி. முழுக்க முழுக்க அமெரிக்காவில் படம்பிடிக்கப்பட்ட 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் முதல்முறையாக இருவரும் ஜோடியாக இணைந்தனர். அமெரிக்கா சென்ற இடத்தில்தான் இருவருக்குமான பரஸ்பர பாஸ்பரஸ் என்கிறார்கள்.

''அந்தப் படத்தின் இயக்குநர் அருண் வைத்தியநாதன் அமெரிக்காவில் வசிக்கும் தமிழர். படத்தில் பிரசன்னா - சினேகா தவிர, கிட்டத்தட்ட மற்ற எல்லா ஆர்ட்டிஸ்ட்டுகளும் அங்கேயே வசிப்பவர்கள். அதனால், பிரசன்னாவுக்கும் சினேகாவுக்கும் கம்பெனிக்கு அங்கே ஆட்களே கிடையாது. தவிர்க்கவே முடியாமல் ரெண்டு பேரும் சேர்ந்துதான் எங்கேயும் போகணும், வரணும். பட்ஜெட் படம் என்பதால், ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரையும் தங்கவைத்தார்கள். அந்த நெருக்கமும் தனிமையும்கூட அவங்களுக்குள்ளே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.

அந்தப் பட சூட்டிங் முடிஞ்சு இந்தியா திரும்பிய பிறகும் ரெண்டு பேரும் அடிக்கடி சந்திச்சுக்கிட்டாங்க. பொது இடங்களில் மத்தவங்க கவனத்துக்கு ஆளாக வேண்டாம்னு சினேகா நடிக்கும் சூட்டிங் ஸ்பாட்களுக்கோ, பொதுவான நண்பர்களின் வீடு களுக்கோ போயிடுவார் பிரசன்னா. கேரவன், மேக்கப் ரூம்னு தனிமை நாடாமல் கூட்டத்துல இருந்து ஒதுங்கி கண்ணியமாகவே நடந்துக்குவாங்க. ஆனா, அது நிச்சயம் டேட்டிங் மட்டுமே கிடையாது. சின்சியர் காதல், சீக்கிரமே கல்யாணம் கதைதான்!'' என்கிறார்கள் கோடம்பாக்கத்து ரகசியக் குருவிகள்.

''அப்படியா..?'' என்று 'அச்சமுண்டு அச்சமுண்டு' பட இயக்குநர் அருண் வைத்தியநாதனிடமே கேட்டோம். '' 'அப்படித் தான்'னு நான் எப்படிச் சொல்ல முடியும்? பொதுவா, ஹாலிவுட்ல என்ன கல்ச்சர்னா, ஒரு படத்தில் நடிக்கும் ஆர்ட்டிஸ்ட்டுகளை சூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ரிகர்சல்னு நிறைய பழகச் சொல்வாங்க. அப்போதான் அவங்களுக்குள்ளே இருக்கும் ஆரம்பத் தயக்கங்கள் மறைந்து இயல்பாப் பழகி, ஒரு புரிதலோடு நடிப்பாங்க. அதே சமயம் வில்லன், ஹீரோ எப்பவும் முறைச்சுட்டே இருக்குற மாதிரி ஸ்பாட்ல யாருக்காவது ஒருத்தருக்கு நல்ல மரியாதை கொடுப்பாங்க. அந்தக் கோபம் ஸ்க்ரீன்ல அவங்களுக் குள்ள ஒளிஞ்சிருக்குற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும். அந்த ஐடியாவில்தான் நான் சினேகா, பிரசன்னாவை கேரக்டர் ஸ்டடி பண்றதுக்காக ரிகர்சல் எடுத்துக்கச் சொன்னேன்.

ஆனா, ஒரு விஷயத்தைச் சொல்லியாகணும். இந்தப் பட சூட்டிங்குக்காக அமெரிக்கா கிளம்புறதுக்கு முன்னாடி சினேகா - பிரசன்னாவுக்கு பரஸ்பர அறிமுகம் கிடையாது. அங்கேஷாப்பிங் போறதோ, டி.வி. பாக்குறதோ, சூட்டிங் ஸ்பாட் கிளம்பி வர்றதோ... எல்லாத்துக்கும் அவங்கதான் ஒருத்தருக்கொருத்தர் துணை. அது நான் எதிர்பார்த்த மாதிரியே படத்தில் அவங்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரியை ஏற்படுத்துச்சு. மத்தபடி அவங்களுக்குள்ள காதல் விஷயம் எதுவும் எனக்குத் தெரியாது!'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

அறிமுகத்துக்குப் பிறகு ஒரே ஆண்டில் எட்டு ஹிட் படங்களில் நடித்த சினேகாவின் கிராஃபில் இந்தக் காதல் ரேகைகள் அடிக்கடி இடறத்தான் செய்யும்! அவரது மாஸ்டர் பீஸ் படமான 'பார்த்திபன் கனவு' பட சூட்டிங் சமயம் இதே போல, 'சினேகா - ஸ்ரீகாந்த் ரகசிய திருமணம்' வதந்தி பற்றி எரிந்தது. அதன் பிறகு 'நாக்' ரவி என்பவருடன் பஞ்சாயத்துப் பரபரப்பு.
ஆனால், அதற்கெல்லாம் சளைக்காமல் தனது மார்க்கெட் சரிந்த சமயமெல்லாம் 'பாண்டி', 'சிலம்பாட்டம்' என்று கிளாமர் லைன் பிடித்து தனது இருப்பிடத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.

இவருக்கு நேர் எதிராக 'சாது' பையன் இமேஜுடன்தான் இது வரை வளைய வந்திருக்கிறார் பிரசன்னா. அவர் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியைக் காதலித்ததாகக் கிளம்பிய பரபரப்புகள்கூட ஆரம்ப ஆரவாரங்களோடு அடங்கிவிட்டன. இப்போது சினேகாவுடன் கிஸ்கிஸ்...

சம்பந்தப்பட்ட இருவரும் இதற்கு என்ன சொல்கிறார்கள்?

''முன்னெல்லாம் ஒரு ஜோடி தொடர்ந்து சில படங்களில் நடித்தால்தான் கிசுகிசு கிளம்பும். ஆனா, இப்ப ஒரு படத்துல நடிச்சாக்கூட கிளம்பிருது. அவ்வளவுதான் இப்போதைக்கு என்னால சொல்ல முடியும். மத்தபடி காதல், கல்யாணம்னா உங்ககிட்டே கண்டிப்பாகச் சொல்லுவேன். பிரசன்னா என் குட் ஃப்ரெண்ட். தட்ஸ் ஆல்!'' என்கிறார் சினேகா துளி புன்னகை சிந்தாமல்.

பிரசன்னாவோ வாய்கொள்ளாத சிரிப்புடன் சொன்னார். '''நீ ஃபீல்டுக்கு வந்து இத்தனை வருஷத்துல உன்னைப்பத்தி இதுவரை ஒரு கிசுகிசுகூட வந்ததில்லை. உன் பெர்ஃபார்மன்ஸ் சரியில்லையே'ன்னு கவிதாலயா கிருஷ்ணன் சார் அப்பப்போ சொல்வார். இப்போ முதல்முறையா கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல நடிச்ச சினேகாவோடு என்னைச் சேர்த்துக் கிசுகிசு வர்றது எனக்கு செம பப்ளிசிட்டியா இருக்கும். நானும் அவங்களும் நிறைய இடங்களுக்குச் சேர்ந்து போயிருக்கோம். அவங்க அக்கா, அம்மான்னு அவங்க ஃபேமிலியில எல்லாருமே என்கிட்டே நல்லா பழகுவாங்க. எனிவே, சினேகா எனக்கு நல்ல சிநேகிதி!''
NeroASERCH is offline


 

All times are GMT +1. The time now is 12:04 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity