Thread
:
Kola Kolaya Mundhirika
View Single Post
09-25-2006, 07:00 AM
#
2
PhillipHer
Join Date
Jun 2008
Age
59
Posts
4,481
Senior Member
கொல கொலயா முந்திரிக்கா... ஒரு சினிமா விளையாட்டு!
'வல்லமை தாராயோ' படத்திற்கு பிறகு மதுமிதா இயக்கும் படம் கொல கொலயா முந்திரிக்கா. சின்ன வயசிலே எல்லாரும் ஆடிய விளையாட்டுதான்! (இப்போ இருக்கிற பொடிசுங்க கிரிக்கெட், இன்டர்நெட் கேம்னு போயிருச்சுங்க, ஹ¨ம்....) அப்படி ஒரு காமெடி விளையாட்டுதான் இந்த படம். முழு கதையையும் சொல்ல முடியாது. ஒரு வரி ஓக்கேவான்னு கேட்டுட்டு அவர் சொன்ன அந்த ஒரு வரி இதுதான். 'புதையல் எடுக்கப் போற ஃபிரண்ட்ஸ் சந்திக்கிற சங்கடங்களும், சச்சரவுகளும்தான் கொல கொலயா முந்திரிக்கா'.
திரைக்கதை, இயக்கம் மட்டும் மதுமிதா. கதை வசனம் கிரேசி மோகன். 'பெரிய பெரிய டைரக்டர்கள் கூட வொர்க் பண்ணியிருக்கீங்க. இந்த படத்திலே வொர்க் பண்றதை பற்றி என்ன நினைக்கிறீங்க?' என்றால், 'பெரிய டைரக்டர் சின்ன டைரக்டர்ங்கிறதெல்லாம் கிடையவே கிடையாது' என்றார் பளிச்சென்று. 'இன்னும் சொல்லப் போனா திரைக்கதையை அற்புதமாக வடிவமைச்சிருக்காங்க மதுமிதா.
பஞ்சதந்திரம் மாதிரி கலகலன்னு இந்த படம் இருக்கும். அதுக்கு நாங்க உத்திரவாதம். இந்த நேரத்திலே ஸ்ரீதர் சாரை நினைச்சுக்கணும். 'காதலிக்க நேரமில்லை' மாதிரி ஒரு காமெடி படம் இன்னும் தமிழ்லே வரவேயில்லை. அந்த ஏக்கத்தை இந்த படம் போக்கும்னு நினைக்கிறேன்' என்றார் கிரேசி.
உங்க முதல் படம் நல்ல குடும்ப படமா இருந்திச்சு. இப்போ ஏன் திடீர்னு காமெடிக்கு? மதுமிதாவிடம் கேட்டபோது, இடையில் குறுக்கிட்டார் கிரேசி.
'ஏன் சார், குடும்பத்திலே காமெடியே இருக்க கூடாதா, குடும்பம்னாலே டிராஜடிதானா? ரொம்ப மோசமான ஆளு சார் நீங்க' என்றார் கலகலப்பாக!
'பொய் சொல்லப் போறோம்' பட ஹீரோ கார்த்திதான் இந்த படத்தின் ஹீரோ. ஹீரோயின் புதுமுகமாம். 'டிசம்பர்லே ரிலீஸ்' என்றார் மதுமிதா. மழை வராட்டாலும் தியேட்டர் பக்கம் ஒதுங்கலாம்.
http://www.tamilcinema.com/CINENEWS/...May/220509.asp
Quote
PhillipHer
View Public Profile
Find More Posts by PhillipHer
All times are GMT +1. The time now is
11:57 PM
.