View Single Post
Old 03-13-2009, 02:40 PM   #23
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
Default
Any further information about him?
நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மரணம்

சென்னை : பழம்பெரும் நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு வயது 73. இறுதிச் சடங்கு நாளை சென்னையில் நடக்கிறது. தமிழில், "அவ்வையார்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். அதன் பிறகு எல்.ஐ.சி.,யில் பணிபுரிந்தபடியே 1969ம் ஆண்டு, "திருக்கல்யாணம்' படத்தில் நடித்தார். தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா' உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழியின் 1,300 படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். "இந்தியன் சம்மர்' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ள இவர், "தலைநகரம்' படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.


நாடக இயக்குனர் தில்லைராஜனின், "நாரதரும் நான்கு திருடர்களும்' நாடகத்தில் நரசிம்மன், கராத்தே பயில்வான் வேடத்தில் நடித்தார். சீன் காமெடியாக அமைய வேண்டும் என்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை நாடகத்தில் கேரக்டர் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று வைத்தால் காமெடியாக இருக்கும் என்று நினைத்து, வைத்தார். இந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால், நூறு நாட்கள் வரை நடந்தது. அதிலிருந்தே நரசிம்மனை, "ஓமக்குச்சி நரசிம்மன்' என அழைக்க ஆரம்பித்தனர்.


இரண்டு வருடமாக தொண்டையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நரசிம்மன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் சிவராமன் தெருவில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றார். ஒரு வாரமாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நரசிம்மன், நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு இறந்தார்.

இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், காமேஸ்வரன் என்ற மகனும், விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற மகள்களும் உள்ளனர்; நிர்மலா அமெரிக்காவில் உள்ளதால், அவர் நாளை காலை சென்னை திரும்புகிறார். அதன் பிறகு நரசிம்மனின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் என்றும் நரசிம்மனின் மகன் காமேஸ்வரன் கூறினார்.
Paul Bunyan is offline


 

All times are GMT +1. The time now is 08:00 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity