Thread
:
Siva Manasula Sakthi - Vikatan Talkies+Jeeva+Yuvan+Rajesh.B
View Single Post
01-28-2009, 05:07 AM
#
6
Fegasderty
Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
சிவா மனசுல சக்தி பாடல் வெளியீடு
விகடன் டாக்கீஸின் தயாரிப்பான சிவா மனசுல சக்தி படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.
ஜீவா, புதுமுகம் அனுயா இணையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு சத்யம் வளாகத்தில் நடந்தது.
அப்போது படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது. படத்திலிருந்து 2 பாடல்களும் போட்டுக் காட்டப்பட்டன.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை புதுமுகம் ராஜேஷ் இயக்கியுள்ளார். எஸ்.எஸ்.வாசனின் பேரனான பி.சீனிவாசன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
முதல் கேசட்டை ஜெயம் ரவி வெளியிட, சூர்யா பெற்றுக் கொண்டார். காமெடி நடிகர் படவா கோபி, தனது மனைவி ஹரிதாவுடன் இணைந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சும்மா சொல்லக் கூடாது, படு சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கியது இந்த ஹாஸ்ய ஜோடி.
நிகழ்ச்சியில் சேரன், சினேகா, மிஸ்கின், லிங்குச்சாமி, கரு. பழனியப்பன், எஸ்.பி.பி. சரண், சசிக்குமார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், ஏவி.எம். சரவணன், சுப்ரமணியம் சிவா, நா.முத்துக்குமார், ஜீவா, அனுயா, யுவன் ஷங்கர் ராஜா, ராஜேஷ் என பெரும் திரளான திரையுலகினர் கலந்து கொண்டனர்.
http://thatstamil.oneindia.in/movies...-launched.html
Quote
Fegasderty
View Public Profile
Find More Posts by Fegasderty
All times are GMT +1. The time now is
01:50 PM
.