View Single Post
Old 08-31-2008, 10:48 PM   #25
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
Originally Posted by joe Originally Posted by Shakthiprabha "வீடு தேடி வந்தவங்களை வான்னு சொல்றது தான் தமிழ் பண்பாடு"
மற்றவற்றோடு இதையும் சேர்த்த மர்மம் என்னவோ ?

ஏன் இந்த பண்பாட்டுல உங்களுக்கு உடன்பாடு இல்லையா? joe,

Tamizh panpaadu means something EXCLUSIVE OR UNIQUE to the tamizh folks. I find it extremely irritating and annoying to hear
'NORMAL HUMAN behaviour' to be labelled as "tamizh panpaadu" in our movies.

வந்தவங்களை உலகத்துல உள்ள அனைத்து மக்களும் "வா" ன்னு சொல்வது தான் பண்பு. அது மனித இயல்பு. மனித பண்பு. அது கன்னட மக்களுக்கும், ஒரிய மக்களுக்கும் இந்தியரல்லாத, இன்னும் ஏனைய நாட்டு மக்கள் சிலருக்கும் பொருந்தும்.

Dont u find it RIDICULOUS to brand few "good human behaviours" as TAMIZH PANPAADU? SP,
இதைத் தான் எதிர்பார்த்தேன் ..இது தமிழ்ர் பண்பாடு என்று சொல்கிறோமே தவிர தமிழனுக்கு மட்டுமே உள்ள பண்பாடு என்று யாரும் சொல்லவில்லையே !

உதாரணத்துக்கு , நான் "சாப்பிடுமுன் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்" என்று நான் சொல்லுகிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம் .அது 'எங்கள் குடிம்பத்துக்கு மட்டும் உள்ள பழக்கம் ' என்று அர்த்தம் அல்ல ..கேட்பவரும் "அப்படியா ! நல்ல பழக்கம் ..எங்கள் குடும்பத்திலும் இந்த பழக்கம் உண்டு " என்று சொல்லி விட்டு போகட்டுமே .

இன்னொன்று....

"ஒரு தமிழ் பொண்ணுக்கு மானம் தான் பெருசு!" அப்போ தெலுங்கு பொண்ணுக்கோ, மஹராஷ்ட்ரா பொண்ணுக்கோ, இந்தியரல்லாத, கென்யா நாட்டு பொண்ணுக்கோ மானம் பெரிசில்லையா?!!?!?! என்ன %$#^^ நான்சென்ஸ் இது!!!

"ஒரு தமிழ் பொண்ணோட மானம் காப்பது என் கடமை"

ஏன் வேற மொழி பேசற பொண்ணு மானம் போச்சுன்னா காப்பாத்த மாட்டீங்களா! சுத்த அபத்தம்! இதைப்பற்றியெல்லாம் நான் கேட்கவேயில்லை .உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை .
Slonopotam845 is offline


 

All times are GMT +1. The time now is 08:33 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity