SP, இதைத் தான் எதிர்பார்த்தேன் ..இது தமிழ்ர் பண்பாடு என்று சொல்கிறோமே தவிர தமிழனுக்கு மட்டுமே உள்ள பண்பாடு என்று யாரும் சொல்லவில்லையே ! உதாரணத்துக்கு , நான் "சாப்பிடுமுன் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்" என்று நான் சொல்லுகிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம் .அது 'எங்கள் குடிம்பத்துக்கு மட்டும் உள்ள பழக்கம் ' என்று அர்த்தம் அல்ல ..கேட்பவரும் "அப்படியா ! நல்ல பழக்கம் ..எங்கள் குடும்பத்திலும் இந்த பழக்கம் உண்டு " என்று சொல்லி விட்டு போகட்டுமே .