View Single Post
Old 03-12-2008, 08:29 PM   #33
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
இன்றைய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் மீரா ஜாஸ்மினும் ஒருவர். நன்றாக நடிக்கத் தெரிந்த இவருக்கு, ரியலாக நடிக்கத் தெரியாததால் வதந்திகள் எப்போதும் இவரை வட்டமிட்டுக் கொண்டிருக்கும்!

தற்போது மாண்டலின் ராஜே சுடன் அடிக்கடி பொது இடங் களில் வலம் வருகிறார். இவ ருடன் காதல்... கல்யாணம் என்று ஏகப்பட்ட வதந்திகள் வந் தாலும் இருவரும் மறுக்கவும் இல்லை... அதை மறைக்கவும் இல்லை.

மீரா ஜாஸ்மினிடம் பேசிய போது,

* முன்பைவிட இப்போது ரொம் பவும் அழகாக இருக்கிறீர்கள், ஆனால் உங்கள் கண்களில் மட்டும் ஏதோ சோகமும், ஏக்க மும் எட்டிப் பார்க்கிறதே?

``ஏக்கம், கவலை என இதை எல்லாம் எனக்கு அனுபவிக்கப் பிடிக்கும்! இதெல்லாம் சேர்ந் தது தானே வாழ்க்கை. சிறுமியாக இருக்கும்போது பத்தாம் வகுப்பு படித்து பாஸ் செய்ய வேண்டுமே என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் இருந்தது. அதை வெற்றிகரமாக முடித்ததும், கல்லூரியில் டிகிரி முடிக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை முடித்ததும் நல்ல வேலை கிடைக்க வேண்டுமே என்ற கவலை இருந்தது...இப்படி வாழ்க்கை முழுதும் ஒருவித ஏக்கமும், சோகமும் இருந்தால்தானே சுவாரஸ்யமாக இருக்கும்.''

* நடிகையானதும் நீங்க ரொம்ப சந்தோஷப்பட்டீர்களா?

``எங்கேயோ இருந்த நான் இன்றைக்கு எல்லாரும் ஏத்துக்க கூடிய நடிகையா இருக் கேன்ங்கறதுல சந்தோஷம்தான். ஆனா... என்னோட மனசுக்குள் யாருமே புரிஞ்சுக்க முடி யாத சில கவலைகளும் இருக்கு. நல்லா வெயிலடிக்கிற நேரத்தில் டான்ஸ் ஆட வேண்டிய கட்டாயமும் உண்டு.''

* நீங்க ரொமான்டிக்கான ஆளா?

``எல்லா உணர்வுகளும் எல்லாரிடமும் உண்டு. அதற்கு அவசியமான நேரத்தில் அனை வருமே அதை வெளிப்படுத்துவார்கள். எனக்குள்ளும் நிறைய ரொமான்ஸ் உண்டு. அது இருந்தால்தானே நான் பெண்ணாக இருக்க முடியும். யாரிடமும் வெளிப்படையாக அன்பு, பாசத்தை வெளிப்படுத்த மாட்டேன். என்னிடம் நெருக்கமாக இருப்பவர்களிடம் மட்டுமே அன்பு, பாசம், காதல் போன்ற உணர்வுகளை வெளிக்காட்ட முடியும். மற்றவர்களிடம் குறிப்பிட்ட இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வேன்.''

* மாண்டலின் ராஜேசும், நீங்களும் திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார்களே?

``இரண்டு வருஷம் கழித்துத் தான் கல்யாணம். எனக்குன்னு சில காலஅவகாசம் தேவை. ஏன்னா... எனக்காக சில வேலைகள் காத்துக்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான விஷ யங்களை எந்த நடிகையும் வெளிப்படையாக சொல்ல மாட்டாங்க. ஆனால் நான் இதை மறைக்க விரும்பலை. காரணம்... எனக்கும், ராஜேசுக்கும் இடையில் இருக்கும் அரு மையான பந்தத்தை, அன்பை யாரும் தவறாக கருதிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கேன். யாரோ ஒருத்தர் கூட நான் சுற்றுகிறேன் என்று யாரும் பேச வேண்டாம். ராஜேசின் குடும்பம் பாரம்பரியம் மிக்கது. என்னால் அந்த குடும்பத்துக்கு எந்த பிரச் சினையும் ஏற்பட்டு விடக்கூடாது. அதனால்தான் இதை மனம் திறந்து சொல்றேன்.''

* உங்களுக்கு இசை பிடிக்குமா?

``சின்ன வயதில் கீ போர்டு வாசிக்க கத்துக்கிட்டேன். அதற்குப் பின்னால் நடிக்க வந்து விட்டாலும் எப்போதுமே இளையராஜாவின் இசை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போதும் நான் இசையை கற்று வருகிறேன்.''

* நடிகைகள் என்றாலே நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்களைத் தான் காதலிப்பார்கள்... நீங்க ஒரு இசைக் கலைஞரை காதலிக்க விசேஷ காரணம் எதுவும் உண்டா?

``இல்லை... திருமணம் என்றாலே எனக்கு இரண்டு கனவுகள் உண்டு. ஒரு நல்ல குடும் பமாக இருக்க வேண்டும். அங்கே பல சந்தோஷங்கள் எனக்காக காத்திருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதுக்குத் தக்கபடி தேர்ந்தெடுக்க நினைத்தேன். ராஜேஷ் என்னை மாதிரியே ரொம்ப சென்சிடிவ் மனிதர். ஏதாவது பிரச்சினை என்றால் வாய் திறந்துகூட பேச மாட்டார். மணிக்கணக்கில் மாண்டலின் வாசித்துவிடுவார். இப்படிப்பட்ட ஆளை இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்துள்ளேன். நிஜத்தில் அப்படிப்பட்டவரை பார்த்ததும் ரொம்பவும் பிடித்துவிட்டது.'' என்று கண்களில் காதல் ஏக்கத்துடன் சிரிக்கிறார் மீரா.
brraverishhh is offline


 

All times are GMT +1. The time now is 07:01 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity