Thread
:
Writer Sujata passes away
View Single Post
02-28-2008, 06:27 PM
#
32
Ifroham4
Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
சென்னை: சுஜாதாவின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இப்போது அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுஜாதாவின் உடல் நாளை காலை 8.30 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
பிற்பகல் 1 மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படவுள்ளது.
சுஜாதாவின் மறைவுக்கு கமல்ஹாசன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் ஊரில் இல்லை. நாளைதான் அவர் திரும்புகிறார்.
அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கர், நேற்று இரவு முழுவதும் அப்பல்லோ மருத்துவமனையிலேயே சுஜாதாவின் குடும்பத்தினருடன் இருந்தார்.
Thatstamil.com
Quote
Ifroham4
View Public Profile
Find More Posts by Ifroham4
All times are GMT +1. The time now is
04:02 PM
.