View Single Post
Old 02-12-2008, 08:28 PM   #5
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default Tamil Cinema and Social Responsibility
தமிழ் சினிமா பற்றிய இந்த விவாத களத்தில் பொதுவாக நடிகர் ,நடிகைகள் ,இயக்குநர்கள் ,இசையமைப்பாளர்கள் ..அவர் பெரிதா இவர் பெரிதா என்பவை போன்ற விவாதங்களே நடக்கின்றன ..ஒட்டுமொத்த தமிழ் சினிமா குறித்த விவாதங்கள் அரிதாகவே இருக்கிறது.

பொதுவாக சினிமா என்பதே ஒரு பொழுது போக்கு ஊடகம் .அதற்கு எந்த அளவு சமுதாய பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்ற பொதுவான விவாதம் தேவையான ஒன்று.

* தமிழ் சினிமா என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமே ,எனவே அதற்கு சமுதாயப் பொறுப்பு தேவையில்லை என யார் கருதுகிறீர்கள்?

* இல்லை ,பொழுது போக்காக இருந்தாலும் அதற்கு குறைந்த பட்ச சமுதாய பொறுப்பு இருக்க வேண்டும் என யார் கருதுகிறீர்கள் ?

* அவ்வாறு சமுதாய பொறுப்பு தேவையென்றால் பொழுதுபோக்கும் சமுதாய பொறுப்பும் எந்த விகிதத்தில் இருக்க வேண்டும் ?

* இதுவரை தமிழ்சினிமாவில் சமூக மாற்றம் ,மதம் ,அரசியல் ,பெண்ணுரிமை ,குடும்பம் ,உறவுமுறைகள் ,சமுதாய பொறுப்பு குறித்து சொல்லப்பட்ட கருத்துக்கள் எவை ..அவை தேவையா ? போதுமான அளவு உள்ளதா அல்லது தேவைக்கு அதிகமாக உள்ளதா ?

* தமிழ் சினிமா தமிழ் மக்களின் சமூக வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது ?

இது பற்றி விவாதிக்கலாமா?
softy54534 is offline


 

All times are GMT +1. The time now is 04:03 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity