தமிழ் சினிமாவில் வீச்சு இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதே. உலகத்தில் எந்த இடத்திலும் இந்த அளவு இல்லை என்றே நான் நினைக்கிறேன். நிச்சயமாக சினிமாவின் தரத்தினால் அல்ல இரு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் பத்து நிமிடத்தில் சினிமா பக்கம் பேச்சு திரும்புவது ஏன் ? வேறு கலை இலக்கிய தேடல்கள் இல்லாமல் வெற்றிடமாக இருக்கின்றனவா. (சமீபத்தில் ஒரு திரியில் நீங்கள் சொன்னது போல, அருகில் உள்ள கேரளாவில் 'படிப்பவர்கள்' இருக்கிறார்கள்). ஆரம்பத்திலிருந்தே இவ்வாறு தான் இருந்ததா ? இடையில் ஏற்பட்ட மாற்றமா ? .