Thread
:
Tamil Cinema and Social Responsibility
View Single Post
02-12-2008, 10:03 PM
#
14
Big A
Join Date
Oct 2005
Age
50
Posts
4,148
Administrator
தமிழ் சினிமா அல்லது எந்த சினிமாவும் மக்களுக்கு அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு ஊடகமே. அந்த ஊடகத்தின் வீச்சு அதன் ஆரம்ப காலங்களில் மிகவும் அதிகம். அந்த காலத்தில் சமூகக் கருத்துக்களைச் சொல்லும் போது அது நன்றாக மக்களை சென்றடைந்தது. கலைஞர்களும் புராண காலத்து சினிமாவில் இருந்து விலகி, சுதந்திர போராட்டம், சமூக கொடுமைகள், பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை இவற்றை, பொழுதுபோக்கு அல்லாமலும் கொடுத்து வெற்றியடைய முடிந்தது. மக்களுக்கு சினிமா பார்ப்பது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது. பார்த்த படத்தையே திரும்ப திரும்ப பார்க்கும் பழக்கம் அன்று நடிகர்களின் ரசிகர்களை தவிர, வெகுஜன மக்களிடமும் பெரிதும் ஓங்கி இருந்தது. ஆனால், இன்று அது மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது.
இன்று சினிமாவை விட மிகுந்த தாக்கத்தை தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது. அதன் வீச்சு நம்மை மலைக்க வைக்கிறது. சினிமாவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு, தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியை மக்கள் தொடர்ந்து கண் கொட்டாமல் பார்ப்பது அதன் ஆற்றலுக்கு நல்ல சான்று. சினிமா கூட தொலைக்காட்சியின் வழியாக வந்தால் தான் இன்று மிகுந்த வரவேற்ப்பைப் பெறுகிறது. இதனால், சமூகக் கருத்துக்களை மட்டுமே வைத்து பின்னப்படும் படங்களும், அல்லது மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுக்கப் படும் திரைப்படங்களின் வெற்றியும், அதன் பொழுதுபோக்கு அம்சத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது. மக்களின் ரசனையும், சினிமா குறித்த எண்ணங்களும் மாறிவிட்டன. ஒரு கருத்து கூட நேரடியாகச் சொல்லப்படாமல், கதையின் ஓட்டத்துடன் சொன்னால்தான் எடுபடுகிறது அல்லது எதிர்பார்த்த தாக்கத்தைப் பெறுகிறது. இவை இல்லை என்றால், வெறும் ஆவணப்படங்களாக சித்தரிக்கப்பட்டு அவை ஒடுக்கப்படுகின்றன.
மக்களை சென்றடைவதில் சினிமாவும், தொலைக்காட்சியும் பின்னிப் பிணைந்து சென்றாலும், இறுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமே தாக்கத்தை ஏற்படித்துகின்றன அல்லது மக்களைக் கட்டிப்போடுகின்றன.
எனவே, சினிமாவில் சொல்லவரும் கருத்து, வெறும் பொழுதுபோக்காக ஒதுக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், ஏற்படும் பாதிப்புகள் மற்ற ஊடகங்களை விட குறைவே என்பது எனது கருத்து. ஆனால், குறைந்த பட்ச பொறுப்புண்ர்வு தமிழ் சினிமாவுக்குத் தேவை. ஆனால், அதை இதில் எதிர்பார்ப்பது *கானல் நீரைப் பார்த்து* தாகம் தீர்ப்பது போன்றது.
சினிமாவை விட, இன்று தொலைக்காட்சிக்கு சமூகப் பொறுப்புணர்வு தேவை என்பது எனது கருத்து.
Quote
Big A
View Public Profile
Find More Posts by Big A
All times are GMT +1. The time now is
06:22 PM
.