இன்று சினிமாவை விட மிகுந்த தாக்கத்தை தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது. அதன் வீச்சு நம்மை மலைக்க வைக்கிறது. சினிமாவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு, தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியை மக்கள் தொடர்ந்து கண் கொட்டாமல் பார்ப்பது அதன் ஆற்றலுக்கு நல்ல சான்று. சினிமாவை விட, இன்று தொலைக்காட்சிக்கு சமூகப் பொறுப்புணர்வு தேவை என்பது எனது கருத்து.