Here is one more! Shall try to post in Thanglish later! அந்த நாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே, நண்பனே நண்பனே நண்பனே இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே - அது ஏன் ஏன் நண்பனே? Bagel என் கையிலே காபி கப் பையிலே; போண்டா திங்க வழியே இல்லையே! டிகிரி காபி கிடைக்கலே லாட்டேயும் ருசிக்கலே - அது ஏன் ஏன் நண்பனே? பாஸ்தாவே அடிக்கடி உண்ணுவோம் வீட்டிலே; பிட்ஸாவும் பார்சலாய் ஃப்ரிஜ்ஜிலே! இட்லியும் சட்னியும் ஞாபகம் வந்ததே - அது ஏன் ஏன் நண்பனே? யானையின் சைஸிலே கத்தரிக்காய் உள்ளதே; யாரிங்கு செய்தாலும் ருசிக்காதே! துக்கிணி சைஸிலே வெண்டக்காய் உள்ளதே - அது ஏன் ஏன் நண்பனே? அப்பளம் பொரித்தாலே பிசுக்குத்தான் ஆகுதே, அப்புறம் துடைக்கவே முடியலே! 'என்றுதான் இந்தியா செல்வோமோ லீவிலே', என்று நான் ஏங்குறேன் நண்பனே! ...