View Single Post
Old 06-09-2012, 04:45 AM   #7
9mm_fan

Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
Default
கலசத்தில் " வரகு " என்ற தானியத்தை நிறப்பி வைப்பது இன்றய நடைமுறை. குறிப்பாக இந்த வரகு தானியத்தைப்பொறுத்தவரை இதற்க்கு ஏழு தொலிகள் இருக்கும். இடி மின்னலைத்தாங்கும் சக்தி கொண்ட கருங்காலி மரத்தினை சப்போர்டாக கொண்டது.

கைதேர்ந்த சிற்பிகளைக்கொண்டு ஆலயம் கட்டுவது எனது தொழில்களில் ஒன்று.எனது ப்ரொபைலில் காணலாம்.

ஏற்கனவே பெங்களூரில் மார்தகள்ளியில் வீரஆஞ்சனேயர் கோவிலையும், தற்போழுது காடுகோடியில் (ஒயிட்பீல்டு ரயிலடி அருகில்) காசிவிஸ்வனாதஸ்வாமி கோவிலை தற்போழுது கட்டி வருகின்றேன்.

கொடைக்கானல் கீழே ஜெய மங்கலம் என்ற ஊரில் உள்ள மீனாட்சி சொக்கனாத ஸ்வாமி கோவிலை விரைவில் துவங்க இருக்கிறோம்.

ஏழு தொலி உள்ள வரகு தானியம் ஏழு ஜென்மங்களை குறிக்கும்.ஆண்டவன் அழிவில்லாதவன்.ஏழு ஜென்மங்களுக்கும் அவனே தலைவன். என்பதே இதன் அர்த்தம்.

மன்னர் காலத்து கோவில்களைப் புனரமைக்கும்பொழுதுகூட கலசத்திலிருந்து ஏதும் கிடைத்ததாக எனக்கு தெரிந்தவரை எந்த தகவல்களும் இல்லை.

எல்லாவற்றிர்க்கும் மேலாக கலசம் என்பது அந்தக்காலத்து இடிதாங்கி. நிச்சயமாக செப்பு ஷீட்களில் மட்டுமே இதை செய்வார்கள். ஒரு நீண்ட செப்பு தகட்டை கலசத்துடன் இணைத்து கர்ப்பகிரகம் கீழே பூமிக்கடியில் இணைத்திருப்பார்கள்.இன்றும் அனத்து கோவில்களிலும் இதைக்காணலாம்.

பெங்களூரில் , மார்தகள்ளியில் உள்ள கலசம் மட்டும் சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை வைத்து முலாம் பூசினோம். மிகச்சிறப்பாக இருக்கும். பெங்களூர்வாசிகள் இதை இன்றும் தரிசிக்கலாம்.

https://groups.google.com/group/mint...a28909a0d8dcf2
9mm_fan is offline


 

All times are GMT +1. The time now is 07:17 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity