Thread
:
Temple Architecture
View Single Post
06-09-2012, 10:16 PM
#
11
Fegasderty
Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
கர்ப்பக்கிரஹம்,அர்த்தமண்டபம், மஹாமண்டபம்,ஊஞ்சல் மண்டபம் (16கால் மண்டபம்),கொடிமரம் 2ம் கோபுரம்,ராஜ கோபுரம் என்று ஆகம விதி ஒவ்வொரு கோவிலுக்கும் உண்டு.
கர்ப்பக்கிரஹத்திற்க்கும், அர்த்தமண்டபத்திற்க்கும் நடுவே அந்தராலயம் என்ற கழுத்துப்பகுதியும் வைக்கலாம்.
அந்தராலயம் வைக்கப்பட்ட கோவில்களில் அந்தராலயம் தாண்டி கண்டிப்பாக பெண்கள் செல்லக்கூடாது.
ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் அதனுடய ஜென்ம நக்க்ஷத்திரம் படியே கர்ப்பக்கிரஹம் அமயவேண்டும். உதாரணமாக கிருஷ்ணர் கோவிலுக்கு ரோஹினி நக்க்ஷத்திரம் படியும், பெருமாள் கோவில் என்றால் திருவோணம் படி கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்.
திருவோணம் நக்ஷத்திரபடி கர்ப்பக்கிரஹம் அமைத்து அதில் கிருஷ்னனைப் பிரதிஷ்டை செய்யக்கூடாது. (இரண்டுமே பெருமாள் தானே என்று சில ஸ்தபதிகள் சமரசம் செய்ய்யக்கூடும்).
ஏரியல் வ்யூ படி எந்த கோவிலைப்பார்த்தாலும் ஒரு மனிதன் படுத்துக்கொண்டிருப்பது போலவே இருக்கும். இதில் கர்ப்பக்கிரஹம் தலைப்பகுதியாகவும், ராஜகோபுரம் கால் பகுதியாகவும் கணக்கில் கொள்ளலாம்.
அப்படிப்பார்க்கும்பொழுது கலசம் நெற்றி பகுதியாக வரும்.
Quote
Fegasderty
View Public Profile
Find More Posts by Fegasderty
All times are GMT +1. The time now is
07:05 PM
.