View Single Post
Old 05-23-2012, 09:21 PM   #16
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
இங்கு நம்முடய வாதம் ," இந்த நாட்டின் தலைமைப் பதவிக்கு வருபவரின் (அல்லது) வரப்போகிறவரின் ஒழுக்கம் " பற்றியது.

பல்லாயிரம் ஆண்டுகளாக நம்முடய நாட்டின் கலாச்சாரம்,பெருமை,பாரம்பரியம் உலகரிந்த விஷயம்.நம் நாட்டு மக்களும், நம்மை ஆண்ட மன்னர்களும் தனிமனித ஒழுக்கத்தை தனது வாழ்நாளில் எவ்வாறு கடைப்பிடித்து வந்துள்ளனர் என்பதை அனைவரும் அறிவோம். சமரசம் , சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக இன்றய தேதியில் நாமும் நம் நாட்டு மக்களும் உலகிற்கே வழிகாட்டுகின்றனர் என்றால் அது மிகை இல்லை.

மதுரையில் நேற்றய பத்திரிகை செய்தி பின்வறுமாறு.....

வேறு வேறு வகுப்புகளில், வேறு வேறு பள்ளிகளில், 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும், மாணவியும் காதலிக்கின்றனர். இதில் மாணவி சற்று மக்கு. 12ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் நீ முட்டை மார்க் வாங்குவாய் என வகுப்பறையில் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவியை ஆசிரியை திட்டுகின்றார். இந்த விஷயத்தை அந்த மாணவி தனது காதலனிடம் சொல்லி அழுகின்றாள். கோபம் கொண்ட அந்த மாணவன் (காதலன்) தனது காதலியிடம் அந்த ஆசிரியையின் புகைப்படத்தைக் கேட்கின்றான். அந்நேரம் பள்ளியில் விடுமுறைச் சுற்றுலா செல்கின்றனர். இதுதான் சமயமென்று அந்த மாணவி சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியையை தனது செல்போனில் படம்பிடித்து அந்த மாணவனிடத்தில் கொடுக்கின்றாள் காதலி. மாணவன் அந்த ஆசிரியை படத்தை " பேஸ் புக் இணயதளத்தில் " செக்சியாக வெளியிட்டு நான் ஒரு விபச்சாரி என்றும், தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும்" என்று வஞ்சம் தீர்த்துகொண்டதோடல்லாமல் ஆசியை செல்போன் நம்பரையும் போட்டுவிட்டான்.

இதுபற்றி ஏதுமறியாத ஆசிரியைக்கு வரிசையாக போங்கால்கள் வர,எரிச்சலைடந்த ஆசிரியைக்கு இணையதள சமாச்சாரம் தெரியவருகின்றது. விளைவு சைபர் கிரைமில் புகார் செய்கின்றார். மாணவன் கைது செய்யப்படுகின்றான்.

இதில் என்ன விசேஷம் என்றால்,இவ்வளவும் நடந்தும் கூட ,நாளிதழ்களில் அந்த ஆசிரியை, மாணவன், மாணவி, மற்றும் பள்ளியின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அனைவரின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதால்.

மானம் மரியாதைக்கு , தர்மம் நியாயத்துக்கும், தெய்வத்துக்கும் மரியாதை கொடுக்கும் கலாச்சாரம் நம் ரத்ததில் காலம் காலமாக ஊரிப்போயுள்ளது.

அப்படிப்பட்ட இத்திருநாட்டில் ஒழுக்கமான தலைவர்கள், நம் நாட்டை நேசிக்கும் தலைவர்கள், மக்களை நேசிக்கும் தலைவர்கள், பெருமைமிக்க இன்னாட்டு கலாச்சாரத்தை நேசிக்கும் தலைவர்கள் ஆள வேண்டும் என்று நினைப்பது மட்டும் எப்படி தவராக இருக்கமுடியும்?.
HedgeYourBets is offline


 

All times are GMT +1. The time now is 01:37 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity