Thread
:
It is Very Shocking to Read ...
View Single Post
05-25-2012, 05:43 PM
#
29
tgs
Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
ஐயா அது தான் எனது கேள்வியும் ஆதங்கமும்.1955க்குப்பின், பெருந்தலைவர் காமராசர் அவர்களது பெருமுயற்சியால்
ஐ.சி.எப்
மற்றும்
திருச்சி பாரத மிகு மின் நிறுவனம்
போன்ற அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் மத்திய அரசின் பெரிய தொழிற்ச்சாலைகள் எதுவும் தமிழகத்தில் முதலீடு செய்யப்படவில்லை.
உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது நல்ல திட்டம் தான். ஆனால் அதில் கொள்ளையடிப்பதும், பலனை அனுபவிப்பதும் காங்கிரஸ்காரர்கள் மட்டுமே என்பதை நினைக்கும்போதுதான் மனசுக்கு நெருடலாக இருக்கின்றது.
சாமானிய மனிதனுக்கு வங்கி கடனென்பது எட்டாத கனியாக அல்லவா இருக்கின்றது.
சரி மொழிவாரியாக மானிலங்கள் பிரிக்கப்பட்டுவிட்டது. பலன் என்ன? காந்தி படுகொலைக்குப்பின் மராட்டிய மானிலத்தில் பிராமணர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். கேரளத்திலிருந்து தமிழன் விரட்டி அடிக்கப்படுகின்றான் . மராட்டியத்திலிருந்து உ.பி.க்காரன் விரட்டியடிக்கப்படுகின்றான்.கர்நாடகத்தில் தமிழன் காலூன்றமுடியவில்லை. இந்திரா படுகொலை நிகழ்ந்தபோது சீக்கியர் சீவப்பட்டனர். ஒன்றுபட்ட இந்தியாவை எங்கு காணமுடிகின்றது?.
பாகிஸ்தானுக்க்கு பயந்து காஷ்மீரம் தானகவே இந்தியாவிடம் ஒட்டிக்கொண்டது. அதனால் இந்தியாவுக்கு என்ன லாபம்? ஆர்டிக்கிள் 370 படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளித்து வருகின்றோம்.இன்றுவரை தொடர்கின்றது. அங்காவது அமைதி தவழ்கின்றதா?
அமெரிக்காவில் எத்தனையோ ஜனாதிபதிகள் ஆண்டுவிட்டனர். ஆனால் ஜார்ஜ் வாஷிங்க்டனும், ஆபிரகாம் லிங்கனும் பெயரெடுத்ததுபோல் மற்றவர் ஜொலிக்கமுடியவில்லயே ஏன்? அவர்களை விட மற்ற அனைவரின் பங்களிப்பும் குறைவுதான் என்பதே அமெரிக்கர்களின் கருத்து.
நேருவின் குடும்பம் புகழப்படுமளவிற்கு இந்தியாவில் எதயும் சாதிக்கவிலை என்பதே எனது முடிவு.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்தவேண்டும் வெளினாட்டில்...இந்த நாட்டின் வளத்தைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.?
சுதந்திரம்பெற்று இன்றுவரை ஜாதியை ஒழிக்க முடியவில்லை ஏன்?
குருகிய பிராந்திய வெறியை களைய முடியவில்லையே ஏன்?
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கின்றது கேரளமும் கர்நாடகமும் . அப்படியென்றால் உச்சநீதிமன்றம் மக்களுக்கு மட்டும் தானா?
இவையெல்லாம் அதிக காலம் மத்தியில் ஆட்சிப்பொறுப்பிலிருந்த காங்கிரஸின் கையாலாகாத்தனம் தானே...
திட்டங்களுக்கு மட்டும் இவர்கள் பெயர் போட்டுக்கொண்டு விளாம்பரப்படுத்திக்கொள்வதற்காகவா ஆட்சியில் அமரவைத்தோம்?
Quote
tgs
View Public Profile
Find More Posts by tgs
All times are GMT +1. The time now is
09:21 AM
.