View Single Post
Old 05-25-2012, 07:47 PM   #31
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
1903ம் ஆண்டு சுண்டைக்காய் நாடான ஜப்பானிடம் தோற்றது ரஷ்யா ? இது ரஷ்யர்களை சிந்திக்கவைத்தது. அதன் விளைவுதான் ரஷ்யப்புரட்சியும் ரஷ்யாவில் ஜனநாயகம் மலர காரணமானது.

1945ம் ஆண்டு அமெரிக்கா வீசிய 2 அனுகுண்டு மூலம் தரை மட்டமானது ஜப்பான். ஜப்பானியர்கள் துவண்டு விடவில்லை .இன்று வல்லரசுகளில் ஒன்றாக விளங்குகின்றது.

1947ல் சுதந்திரமடைந்து இன்றுவரை வறுமை,வேலையில்லாத்திண்டாட்டம்,ஜாதிக்கொடுமைகள்,பிரா ந்தீய குறுகிய கண்ணோட்டம்,லஞ்சம்,ஊழல் என்று பல கொடுமைகள் இந்தியாவில் தலைவிரித்தாடுகின்றது என்றால் அதற்க்கு காரணம் யார்?

இந்த நாட்டை அதிக காலம் ஆண்டது காங்கிரஸ் மட்டுமே....நேரு குடும்பம் மட்டுமே தியாகம் செய்தது என்றால் அமரர் வ.ஊ.சி, பெருந்தலைவர் காமராசர் போன்றோர்கள் தியாகத்தை என்னவென்பது?

மேற்கு வங்கத்தில் ,வங்கதேசத்தினர் ஊடுருவல், வடகிழக்கு மானிலங்களான சிக்கிம்,அருனாச்சலபிரதேசத்தில் சீனர்களின் ஊடுருவல், மும்பை,குஜராதில் பாக்கிஸ்தானியர் ஊடுருவல், தமிழகத்தில் இலங்கைதமிழர்கள் ஊடுருவல் என் இந்தியாவின் நான்கு மூலைகளிலும் சட்டவிரோத ஊடுருவல் பெருகிவிட்டது. அதற்க்கான உருப்படியான எந்த தடுப்பு நடவடிக்கைகளிலும் இந்திய அரசு வெற்றி பெறவில்லை.

காஷ்மீர் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றதா? என்று சந்தேகிக்கும் வண்ணம் உள்ளது.

குடும்பக்கட்டுப்பாடு திட்டம் மட்டும் இந்தியனுக்கு. மக்கள் தொகையை கட்டுப்படுத்த அத்திட்டம் என்றால்.... அன்னிய ஊடுருவலை தடுக்கத்தவறியதன் கையாலாகாத்தனத்தால் கஷ்டப்படுவது சராசரி இந்தியன் மட்டுமே....

இதுஒருபுறம் இருக்க கடந்த 65 ஆண்டுகளில் அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் இந்தியர் குடியுரிமை பெற்று நிரந்தரமாக அங்கேயே செட்டிலாகிவிட்டனர்.

நாசாவில் பணிபுறியும் விங்ஞானிகளில் பெறும்பகுதியினர் இந்தியர்கள் என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது. அப்படி படித்து திறமையான நம் சொந்தங்களை புலம்பெயர காரணம் என்ன?

குட்டி மானிலமான கேரளாவில் 41 ஆறுகள் ஓடுகின்றன. அத்தனையும் வற்றாத ஜீவநதிகள். மலைப்பாங்கான கேரளாத்தில் சமவெளியான நிலப்பரப்பும், வயல் வெளிகளும் மிக மிக குறைவு.கம்யுனிஸ்டுகள் புண்ணியத்தில் அங்கு தொழிற்ச்சாலைகளும் குறைவு. எனவே அவர்களின் மொத்த தண்ணீர் தேவை அவர்கள் மானில நதிகளின் இருப்பில் 2 சதவீதம் தான். மீதி 98 % வீணாக அரபிக்கடலில் யாருக்கும் பலனில்லாமல் கலக்கின்றது. அதில் ஒரு சிறிய பகுதி இங்கு தமிழகத்திற்க்கு திருப்பிவிடப்பட்டால் தமிழகம் செழிக்கும்.

மத்திய அரசு இதில் தலையிடமுடியாமல் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. இந்த அவலம் எதனால்?

உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டினர் ஊடுருவல்,நம் சொந்த மக்கள் வேலை தேடி வெளிநாட்டிற்க்கு செல்லும் அவலம். இவை எல்லாம் எதனால்?
LottiFurmann is offline


 

All times are GMT +1. The time now is 12:42 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity