பாட்டு வேணுமா? டுபாக்கூரு பாஷயிலே பாட்டு வேணுமா? ஒரு தபா எய்திப் பாக்கறே(ன்), குந்து நாய்னா! நல்ல தமிள் எய்தினாலே நாஸ்தி ஆவுறே(ன்) - நா(ன்) லொள்ளு பாஷ எய்த சொல்ல இன்னா ஆவே(ன்)! எப்படியும் கேட்டதாலே இத்த எய்தரே(ன்) - நீயும் அப்படியே கேட்டுக்கினு குந்து நாய்னா! பாப்பாருங்க பாஷ நமக்கு ஈடு ஆகுமா? இங்கே பாப்பவங்க இத்த சொன்னா நம்புவாங்களா? சிங்காரச் சென்னைக்கே நம்ம பாஷதான், ஒரு சிங்காரம் கொடுக்குதுன்னு நம்பு நாய்னா! டுபாக்கூரு பாஷதானே நமக்கு நல்லது, ஒரு தபா கூட சொல்லாங்காட்டி நாயமில்லதா(ன்)! சென்னைச் செந்தமிழ் வாழ்க!! . . .