உயிருள்ள சமுதாயத்தின் அடையாளம் பற்றி ஆர்னால்ட் டாயன்பீ கூறுகிறார்- யாரேனும் ஒருவர் துணிந்து ஒரு புதுமை செய்தால் பத்துப் பேர் அவரைப் பின்பற்றுவார்கள். பத்துப் பேர் அவரைக் கடுமயாக எதிர்ப்பார்கள். மீதி 80 பேர் மதில் மேல் பூனையாக நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். புது முயற்சி வெற்றி பெற்றுவிட்டால் இந்த 80 பேரில் பெரும்பாலானோர் புதுமையை ஏற்றுக் கொள்வார்கள்.தாழ்த்தப்பட்ட சமுதாயங்களில் தலைவன் சொன்னது தான் சட்டம். அதை மீறி எவனும் புதுமை செய்ய முடியாது. பிராமண சமுதாயத்தை முற்கூறிய இலக்கணப்படி ஒரு உயிருள்ள சமுதாயம் என்று ஏற்றுக் கொள்ளலாம். நம்மில் யாரேனும் ஒருவர் துணிந்து உபநயனம் விவாஹம் போன்றவற்றை எளிமையாக, கேளிக்கைத் தன்மை இல்லாமல், அதன் வைதிகத் தன்மை கெட்டுப் போகாமல், நடத்தினால் சிறுகச் சிறுக சமுதாயம் முழுவதும் மாற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? உங்களுக்கு உபநயன வயதில் பையன் இருந்து, அவனுக்கு நீங்கள் இது போன்று வைதிகத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முறையில் உபநயனம் செய்து வைக்கத் தீர்மானித்தால் முத்ல எதிர்ப்பு உங்கள் இல்லாளிடமிருந்து தான் வரும். நன்னா...இருக்கு. நமக்கு இருக்கறது ஒரே புள்ளை. விமரிசையாகச் செய்யாவிட்டால் எப்படி?இதைச் சாக்கிட்டுத் தானே நம் வீட்டுக்கு நாலு பந்துக்கள் சினேகிதாள் வருவா. அவாளுக்கெல்லாம் மரியாதை பண்ணி புடவை வேஷ்டி வாங்கித் தர வேண்டாமா. எல்லாரும் வந்தா இந்த வீடு போறுமா? உங்க கஞ்சத்தனத்தை எல்லாம் இப்போ தான் காட்டறதா ................. என்று நீட்டி முழக்குவார். நீங்கள் சொல்ல வந்ததையே முழுவதுமாகச் சொல்ல விடமாட்டார். சமஷ்டி உபநயனங்களில் செலவு குறைகிறதே அன்றி ஆடம்பரங்கள் குறைவதில்லை. நம் வீடுகளில் எல்லாம் மதுரை மாடல் நிர்வாகம் தான். (எல்லாருக்கும் தெரிஞ்ச ரகசியத்தை வெளிப்படையாகச் சொல்வதில் என்ன வெட்கம்?) எனவே எந்த சீர்திருத்தமும் தாய்மார்களிடமிருந்து தான் ஆரம்பிக்கவேண்டும். உபநயனத்தை ஆயுஷ்ஹோமம், மங்கல நீராடட்ல் போன்று வீட்டளவில் செய்ய வேண்டும். பையன் தொடர்ந்து சந்தியா வந்தனம் செய்யக் கூடிய வகையில் வைதிகத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மந்திரங்களை அர்த்தம் சொல்லி நிதானமாகச் சொல்ல வேண்டும். பையன், தகப்பனார் அந்த மந்திரத்தைத் திரும்பச் சொல்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். இது தாய்மார்களால் தான் முடியும். தாயக் குலம் என்ன நினைக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.