View Single Post
Old 07-15-2012, 05:56 AM   #19
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
கருணாநிதி தமிழினத் தலைவர் என்பதெல்லாம் அவருக்கு அவரே வைத்துக்கொண்ட பெயர்.

இப்போது மட்டும் அல்ல எப்போதுமே அவருக்கு இருக்கும் கவலை எல்லாம் தனது குடும்பத்தைப்பற்றியது மட்டுமே.

பதவி சண்டை இல்லாமல் தனது மகன்களிடயே ஒற்றுமை வேண்டும். அழகிரியும் ஸ்டாலினும் தனது குடும்பம் கொள்ளையடித்து சேர்த்த பணத்தை தனது மகன்கள் இருவரும் பத்திரமாக காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.

2ஜி வழக்கிலிருந்து கனிமொழி விடுதலை ஆகவேண்டும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஜெயலலிதா மீது தன்னால் போடப்பட்ட வழக்கில் அவருக்கு நீதிமன்றம் அவரை தண்டிக்கவேண்டும்.

இதுபோன்ற சுயநல் எண்ணங்கள் மட்டுமே அவரை ஆட்டிப்படைக்கின்றது.

அவர் என்றுமே தமிழையும் தமிழனையும் பற்றி கவலைப்பட்டது கிடையாது.

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றபோது இவர் சோனியாவின் சேலைத் தலைப்பில் ஒளிந்துகொண்டு, 2ஜி வழக்கில் தனது மகளை விடுவிக்க முயற்சித்துக்கொண்டிருந்தார்.

தமிழுக்கும் தமிழனுக்கும் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் கருணாநிதி செய்த துரோகம் மன்னிக்கமுடியாதது.

புருஷோத்தமர் போரில் புலி.வாள் எடுத்தால் வையம் நடுங்கும்.

அவர் இப்போது புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக்காண்பவரே...

மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே!...

மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே!....குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே!...

என் தாய் அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன்....

இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். ....துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை....

தைரியமில்லாவிட்டால், தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால், ஓடி விடும். புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும்!

கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்! ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும்!......

ஏன், அவமானமாக இருக்கிறதா? என் அன்னையை தூஷித்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர்?....

ஏ ராஜ விக்ரகமே! பழி வாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான். அப்படியே நில்லும்! அசையாமல் நில்லும்!...

இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன். இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன். முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில்! அந்தப் பல்லை எடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன்...

பராசக்தி படத்தில் அவர் எழுதிய வசனம் இது... ஏனோ இப்பொழுது இது நினைவுக்கு வந்தது.....
HedgeYourBets is offline


 

All times are GMT +1. The time now is 08:00 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity