View Single Post
Old 07-10-2012, 10:03 PM   #9
PhillipHer

Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
Default
கம்பர் சொன்ன அந்தக் கவிதைக்கு அர்த்தம் என்னவென்றால் ஆரைகீரைக்கு நான்கு இலையிருக்கும் ஒரு தண்டு மட்டும் இருக்கும் அதனால்தான் அவர் "நாலிலைப் பந்தலடி ஒரு காலில் நிற்குதடி" என்றார்.

இதற்கு மற்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது ,எனனவென்றால் ஒரு பெண் ஒத்தக் காலில் நின்று கொண்டு ஆண் பிள்ளைக்கு வழிவிடாமல் இருக்கிறாள்.


இங்கு கம்பர் இருமுறை " டி" என்று ஒளவையாரை பார்த்து சொல்லுகிறார்

"நாலிலைப் பந்தலடி ஒரு காலில் நிற்குதடி" என்று.

ஆனால் ஒளவையார் "லே" என்று ஐந்து முறைக்கும் மேலே சொல்லுகிறார் ஒரு ஆண் மகனை பார்த்து



A similar duel between two poets:


ஒரு நாள் ஆத்தோட படித்துறையில ஒட்டக்கூத்தரும் கம்பரும் தள்ளி தள்ளி நின்னு கால்மொகங் கழுவிட்டு இருந்தாங்களாம். அப்ப, தண்ணி ஒட்டக்கூத்தர் நின்னுட்டு இருந்த இடத்துல இருந்து, கம்பர் நின்னுட்டு இருந்த இடத்துக்கு போய்ட்டு இருந்துச்சாம். அதப் பாத்த ஒட்டக்கூத்தர் குசும்புத்தனமா, 'கம்பரே நான் கழுவின கழுநீர்தான் உமக்கு வருது பாத்தீரா'னு கிண்டலா கேட்டாராம்.

அதக் கேட்ட கம்பர், "அட ' நீரே' வந்து என் காலில் விழுந்தால், நான் என்ன செய்வது?"னு சொன்னாராம் பதிலுக்கு!



Coutesy: Internet





PhillipHer is offline


 

All times are GMT +1. The time now is 09:03 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity