Thread
:
மேலும் எத்தனை காலம் ஏமாற்றுக்காரர்கள் வ&
View Single Post
07-14-2012, 04:38 PM
#
22
radikal
Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
ஒரு வருடதிற்க்கு முன்பு எனக்கும் ஆப்பிரிக்க நாடான " ரிப்பப்ளிக் ஆப் கானா " விலிருந்து எட்சன் மில்ஸ் என்பவர் மெயில் அனுப்பினார். தான் அன்னாட்டு வங்கி ஒன்றின் ஆடிட் ஆபீசர் என்றும்,2008-09 ஆண்டு கணக்கு தணிக்கையின்போது பலலட்சம் மதிப்பினாலான் அமெரிக்க டாலர்கள் அவரது வங்கியில் கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதைவைத்து இந்தியாவில் ரியலெஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யவிரும்புவதாகவும்,அதை டிரங்க்பெட்டியில் வைத்து இந்தியாவிற்க்கு அனுப்பிவைத்ததாகவும்,என்னிடம் ஒப்படைக்க இரண்டு டிப்ளமேட்ஸ்களை அனுப்பிஉள்ளதாகவும், ஆனால் டில்லி ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதற்க்கு ரூ 17500/- கட்டினால்தான் வெளியே கொண்டுவரமுடியும் என்றும் எனக்கு டில்லியிலிருந்து பேசுவதாக ஒரு செல்போனிலிருந்து அழைப்பு வந்தது.
அந்த எண்ணைக்குறித்துவைத்துக்கொண்ட நான், அவனிடமிருந்து அடுத்த அழைப்பு வரும்வரை காத்திருந்தேன்.
அடுத்த அழைப்பும் வந்தது. அதில் அவன் ஒரு ஸ்டேட் பாங்க் எண்ணைக் குறிப்பிட்டுஇருந்தான். டில்லி அக்கவுண்ட் என்று பூ சுற்றினான்.
உலகுக்கே அல்வா குடுக்கும் திருநெல்வேலிக்காரனான என்னிடம் பலிக்குமா?
நான் அந்த வங்கியின் கிளை என்ன என்று தேடினால் அது " அஸ்ஸாம் கவுகாட்டி கிளை " என்று தெரிந்தது.
உடனே சந்தேகம் மேலும் வலுப்பட்ட நான் " டிரேஸ் த மொபைலில் அந்த எண் எந்த மானிலத்தைச்சேர்ந்தது? " என்று பார்தேன். அதுவும் அஸ்ஸாம் கவுகாத்தி என்று காட்டியது.
அந்த தொலைபேசி நபர் மீண்டும் மீண்டும் என்னை தொடர்புகொண்டார். அதே வேளையில் ரிப்பப்ளிக் ஆப் கானாவிலிருந்து எட்சன் மில்ஸ் என்பவனும் பேசினான்.
டிரங்க் பெட்டி கொடுப்பதாக இருந்தால் மதுரைக்கு கொண்டுவந்து கொடு. பெட்டி வராமல் அதை சோதித்து பார்க்காமல் சல்லி பைசா கொடுக்கமுடியாது என்று கராராக சொல்லி விட்டேன்.
இத்தனைக்கும் அவன் பாக்கிங்க் பிக்சர்ஸ் என்று கட்டு கட்டாக டாலர் நோட்டுக்களை ஒரு பெட்டியில் அடுக்குவதுபோல் படம் எல்லாம் அனுப்பினான்.
போடா அதுக்கு வேற ஆளைப்பார்ன்னு சொல்லிவிட்டேன்.
Quote
radikal
View Public Profile
Find More Posts by radikal
All times are GMT +1. The time now is
07:43 AM
.