Thread
:
Let us all raise our voices!
View Single Post
06-28-2012, 02:12 AM
#
1
radikal
Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Let us all raise our voices!
Adiyen. Listing below the email id of the Tamilnadu CM's cell and also the link for the
Change.org - Start, Join, and Win Campaigns for Change
petition to remove the strongly objectionable course content depicting Goddess Andal in a very poor taste by Manonmaniam Sundaranar University, Tirunelveli, Tamilnadu.
Adiyen requests bhagavatas to kindly take a minute and send our strong protest to this highly deplorable act.
cmcell@tn.gov.in
Petition: Tamil Nadu Government: Remove in-factual atrocious portion from University syllabus | Change.org
Below is a news item that appeared in the "Dinamani" Tamil daily on 25th July. Let us raise our voice together against this. Please send your mails to Chief Minister requesting to immediately withdraw it and also urging to take suitable action on those responsible for this.
பல்கலை பாடத்தில் ஆண்டாள் பற்றி அவதூறு:
திருநெல்வேலி, ஜூன் 25: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்போது மாற்றப்பட்டுள்ள இளங்கலை தமிழ் புத்தகத்தில் நோன்பு என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்று பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில், இளங்கலை முதலாம் பருவத்துக்கான பாடத்திட்டத்தில், தமிழ் மொழி பாடப் பிரிவில் கொடுக்கப்பட்ட புத்தகத்தில் இத்தகைய காழ்ப்புணர்வுக் கட்டுரையை பல்கலைக் கழக பாடத்திட்டக் குழுவினர் சேர்த்துள்ளனர். இதில், ஆண்டாள் தேவதாசியாகவும், அவர் பெரியாழ்வாருக்கு திருட்டுத்தனமாகப் பிறந்ததாகவும், ஆண்டாள் மீது மன்னன் வல்லபதேவன் மோகம் கொண்டு பரிசுகளை அனுப்பி வைத்தான் என்றும் ஒரு கதையை இணைத்துள்ளனர். மேலும் ஆபாச வர்ணனைகளும் இந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தத் தகவலை வெளிக் கொணர்ந்துள்ள அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு, தமிழக அரசின் சின்னமாக விளங்கும் திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் தமிழகத்தின் கவுரவத்தை வெளிக்காட்டுவது. ஆண்டாள், நம் தமிழ் பண்பாட்டின் சிகரமாக தெய்வமாக விளங்குபவர். அவரை இவ்வளவுதூரம் கீழ்த்தரமாகச் சித்திரிக்கும் வகையில் பல்கலை பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது, பாடத்திட்டத்தை தயார் செய்த பேராசிரியர்களின் வக்கிர புத்தியையும் கீழ்த்தரமான எண்ணத்தையும் காட்டுகிறது என்று கூறியுள்ளது. மேலும், இது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் திருநெல்வேலி நகரில் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தை உடனே நீக்கி மன்னிப்பு கேட்காவிட்டால் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என ஏ.பி.வி.பி அமைப்பின் மண்டலச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறினார். இது குறித்த அறிக்கை ஒன்றினையும் அவர் வெளியிட்டார்.
பொதுவாக, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று பல்கலை பாடத்திட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டு, பாடத்திட்டம் மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடம் 2012-13ம் ஆண்டுக்கான மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் மொழி பாடத்தில் இத்தகைய இடைச் செருகல்களை பல்கலை பாடத்திட்டக் குழு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The news item can be directly viewed here also
Dinamani - Tamil Daily News Paper,epaper,latest tamil news,politics,tamil movies,Photo Gallery
Quote
radikal
View Public Profile
Find More Posts by radikal
All times are GMT +1. The time now is
04:55 AM
.