நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் பியூலா குமாரி தலைமையிலான குழு முதலாம் ஆண்டு முதல் பருவ தமிழ் பாடத்திட்டத்தை தயாரித்தது. சர்ச்சைக்குரிய பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நெல்லை பல்கலை. பதிவாளர் மாணிக்கத்திடம் கேட்டபோது, ‘ஆசிரியர் செல்வராஜ் வெளியிட்ட ‘நோன்பு' என்ற தலைப்பிலான புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதி இடம் பெற்றுள்ளன. இதில் ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டு புத்தகம் மறு பதிப்பாக விரைவில் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக பாடத்திட்டக் குழு தலைவர் பியூலா குமாரி விளக்கம் தெரிவித்துள்ளார் என்றார்.